ஐபிஎல்: சென்னையில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்: ஒருவருக்கு 2 டிக்கெட்தானாம்!

ஐபிஎல்: சென்னையில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்: ஒருவருக்கு 2 டிக்கெட்தானாம்!

ஐபிஎல்: சென்னையில் டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்: ஒருவருக்கு 2 டிக்கெட்தானாம்!
Published on

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை முதல் டிக்கெட் விற்பனை தொடங்குகிறது.

பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

 சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சிஎஸ்கே), சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சிஎஸ்கே, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கத்தில் வரும் 10 ஆம் தேதி நடக்கிறது.

இந் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும். ஒருவருக்கு 2 டிக்கெட்தான். குறைந்த பட்ச கட்டணம் ரூ.1,300. மற்றும்
ரூ.6,500, ரூ.5,000, ரூ.4,500, ரூ.2,500, ரூ.1,500 ஆகிய கட்டணங்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. 
www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களிலும் டிக்கெட் பதிவு செய்துகொள்ளலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com