ஐபிஎல் : மோசமான சாதனையில் விராத் கோலியை முந்திய உத்தப்பா

ஐபிஎல் : மோசமான சாதனையில் விராத் கோலியை முந்திய உத்தப்பா
ஐபிஎல் : மோசமான சாதனையில் விராத் கோலியை முந்திய உத்தப்பா

நடப்பு ஐபிஎல் சீஸனில் முதன்முறையாக தோல்வியை தழுவியுள்ளது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. 

ஸ்

அந்த தோல்வியின் மூலம் மோசமான சாதனை ஒன்றுக்கு சொந்தக்காரராகி உள்ளார் ராபின் உத்தப்பா. கடந்த 2008 முதலே ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறார் உத்தப்பா. முதல் சீஸனில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் அதற்கடுத்து ஆர்.சி.பி (2009-2010), புனே வாரியர்ஸ் (2011-2013), கொல்கத்தா நைட்ரைடர்ஸ் (2014-2019), ராஜஸ்தான் ராயல்ஸ் (2020) என வெவ்வேறு அணிகளுக்காக ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் நேற்றையப் போட்டியில் தோல்வியை தழுவியது.

அதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி அதிக முறை தோல்வியை சந்தித்த அணி வீரர் என்ற மோசமான சாதனை பட்டியலில் விராத் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்திற்கு முந்தியுள்ளார் உத்தப்பா. ஆர்.சி.பி அணிக்காக விளையாடி வரும் கோலி 90 போட்டிகளில் அந்த அணி தோல்வியை சந்தித்த போது அதன் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றுள்ளார். 

அதனை உடைத்து 91 போட்டிகளில் தோல்வியை சந்தித்த அணியின் ப்ளேயிங் லெவனில் இடம்பெற்றவர் வீரராகியுள்ளார் உத்தப்பா.  அதற்கடுத்த இடங்களில் கொல்கத்தாவின் தினேஷ் கார்த்திக் (87 தோல்வி), மும்பையின் ரோகித் ஷர்மா (85 தோல்வி) மற்றும் அமித் மிஷ்ரா, ஏபி டிவில்லியர்ஸ் (57 தோல்வி) மாதிரியான வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com