சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடந்தே தீரும்: ராஜீவ் சுக்லா

சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடந்தே தீரும்: ராஜீவ் சுக்லா

சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி நடந்தே தீரும்: ராஜீவ் சுக்லா
Published on

சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்று ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லா தெரிவித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின் றன. தமிழ்நாட்டில் நடைபெற உள்ள ஐபிஎல் போட்டியை ரத்து செய்ய வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கருத்து தெரிவித் து வருகின்றன. ரஜினி உள்ளிட்ட சிலர், சென்னை வீரர்கள் கருப்புப்பட்டை அணிந்து தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க வேண் டும் என கூறியுள்ளனர்.

சேப்பாக்கம் விளையாட்டு மைதானமே காலியாக இருந்தால் நமது ஒற்றுமையை உலகம் அறியும் என பாரதிராஜா, சத்யராஜ் உட்பட பல திரைத்துறையினர் வலியுறுத்தியுள்ளனர். தமிழக வாழ்வுரிமை கட்சித்தலைவர் வேல்முருகன், போட்டியை நடத்தினால் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுபற்றி ஐபிஎல் சேர்மன் ராஜீவ் சுக்லாவிடம் கேட்டபோது, ’திட்டமிட்டபடி சென்னை சேப்பாக்கத்தில் போட்டி நடக்கும். போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும். அரசியல் சர்ச்சைக்குள் ஐபிஎல்-லை இழுக்கக் கூடாது’ என்றார்.

இதனால் சென்னை-கொல்கத்தா அணிகள் பங்கேற்கும் ஐபிஎல் போட்டி பலத்த பாதுகாப்போடு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com