88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி!

88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி!

88 ரன்களில் சுருண்ட பஞ்சாப் : 8 ஓவர்களில் விளாசிய பெங்களூரு அணி!
Published on

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி படுதோல்வி அடைந்தது. 

டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. தொடக்க வீரர்கள் கே.எல்.ராகுல், கெயில் சற்று நேரம் நிலைத்து நின்று ஆடினர். கே.எல்.ராகுல் 21 ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியின் சரிவு தொடங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. ஆரோன் பின்ச் மட்டும் 26 (23) ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தனர். 7 பேர் ஒற்றை இலக்க ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தனர். 15.1 ஓவர்களில் பஞ்சாப் அணி 88 ரன்களுக்குள் சுருண்டது. உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த ஐபிஎல் தொடரில் எடுக்கப்பட்ட குறைவான ஸ்கோர் இது. 

இதனையடுத்து, 89 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு அணியில் கேப்டன் விராட் கோலியும், பார்த்திவ் படேலும் அதிரடியாக விளாடினர். பெங்களூரு அணி 8.1 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி வெற்றி பெற்றது. கோலி 48 (28), பார்த்திவ் பட்டேல் 40(22) ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

 12 போட்டிகளில் விளையாடியுள்ள பெங்களூர் அணிக்கு இது 5வது வெற்றி ஆகும். அதேபோல், 12 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணிக்கு இது 6வது தோல்வி ஆகும். இதனால், பஞ்சாப் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வதற்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் பெங்களூர் அணி வெற்றி பெற்றால், மற்ற அணிகளின் முடிவை பொறுத்து வாய்ப்பு மிகக் குறைவாக உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com