சீறியது மும்பை: சறுக்கியது கொல்கத்தா

சீறியது மும்பை: சறுக்கியது கொல்கத்தா
சீறியது மும்பை: சறுக்கியது கொல்கத்தா

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது. இதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை மும்பை தக்க வைத்தது.

ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் மும்பை –கொல்கத்தா அணிகள் மோதின.

மழை காரணமாக அரை மணி நேரம் தாமதமாக ஆட்டம் தொடங்கியது. டாஸ் வென்ற கொல்கத்தா, பந்து வீச்சைத் தேர்வு செய்தது. மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சவுரப் திவாரி, சிம்மன்ஸ் களம் இறங்கினார்கள். மூன்றாவது ஓவரில் சிம்மன்ஸ் ரன் எதுவும் எடுக்காமல், போல்ட் பந்து வீச்சில் காலியானார். அடுத்து கேப்டன் ரோகித் சர்மா, சவுரப் திவாரியுடன் இணைந்தார். இருவரும் அடித்து ஆடினார்கள். ரோகித், 27 ரன் எடுத்த நிலையில் ராஜ்பூத் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார். பின்னர் வந்த அம்பத்தி ராயுடு, சவுரப் திவாரியுடன் சேர்ந்தார். இவர்களும் அடித்து ஆட, 13.1 ஓவர்களில் மும்பை 100 ரன்னை எட்டியது. இந்நிலையில் திவாரி 52 ரன்னில் (43 பந்து, 9 பவுண்டரி) எதிர்பாராதவிதமாக ரன் அவுட் ஆக, பொல்லார்ட், ராயுடுவுடன் இணைந்தார். ராயுடு 63 ரன் (37 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) பொல்லார்ட் 13 ரன் எடுத்து ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மும்பை, 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் போல்ட் 2 விக்கெட்டும், குல்தீப் யாதவ், ராஜ்பூத் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

பின்னர் 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கொல்கத்தாவால் 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால் மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அந்த அணியின் மனிஷ் பாண்டே 33 ரன்னும் கிரான்ட்ஹோம் 29 ரன்னும் எடுத்தனர்.

மும்பை தரப்பில் சவுதி, வினய்குமார், ஹர்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும், ஜான்சன், கரண்‌ஷர்மா தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினார்கள். மும்பை அணியின் அம்பத்தி ராயுடு ஆட்டநாயகன் விருது பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 14வது ஆட்டத்தில் ஆடிய மும்பை, 10வது வெற்றியுடன் புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. 14வது ஆட்டத்தில் விளையாடிய கொல்கத்தா அணி, புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு சறுக்கியது. இருந்தாலும் கொல்கத்தா அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com