ஐபிஎல் இறுதிப் போட்டி பரபர - குஜராத்திற்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான்!

ஐபிஎல் இறுதிப் போட்டி பரபர - குஜராத்திற்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான்!
ஐபிஎல் இறுதிப் போட்டி பரபர -  குஜராத்திற்கு எதிராக பேட்டிங்கை தேர்வு செய்தது ராஜஸ்தான்!

இரண்டு மாதங்களாக களைகட்டிய 15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் கிளைமேக்ஸ் இன்று. ஐபிஎல் கிரிக்கெட்டின் முதல் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும், அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியும் இம்முறை கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்த உள்ளன.

ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, லீக் சுற்றில் 14 போட்டிகளில் 10ல் வெற்றி பெற்று முதலிடம் பிடித்திருந்தது. அந்த அணிக்கு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பாண்டியா பக்கபலமாக இருக்கிறார். மேட்ச் வின்னராக அதிரடி வீரர் டேவிட் மில்லர், ஜொலிக்கிறார். பேட்டிங்கில் விருதிமான் சாஹா, ஷுப்மான் கில், ராகுல் திவாட்டியா, மேத்யூ வேட் ஆகியோரும், பந்துவீச்சில் ரஷீத் கான், அல்சாரி ஜோசப், முகம்மது ஷமி, யாஷ் தயாள் ஆகியோரும் கை கொடுக்கின்றனர்.

சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இறுதிப்போட்டிக்கு முன்னேறியதில் தொடக்க வீரர் ஜோஸ் பட்லரின் பங்கு அளப்பரியது. அவர் நடப்புத் தொடரில் 4 சதங்கள், 4 அரைசதங்கள் உட்பட 824 குவித்துள்ளார். சஞ்சு சாம்சன், ஜெய்ஷ்வால், ஹெட்மயர், படிக்கல் ஆகியோரும் பேட்டிங்கில் ஆறுதல் அளிக்கின்றனர். 26 விக்கெட்களை வீழ்த்தியுள்ள சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹலும், ராஜஸ்தான் அணியின் நம்பிக்கை நாயகனான வலம் வருகிறார். ஆல்ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினும் அசத்தி வருவது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

நடப்புத் தொடரின் லீக் மற்றும் முதல் குவாலிபயர் ஆட்டத்தில் ராஜஸ்தானை வீழ்த்திய உற்சாகத்தில் குஜராத் அணி உள்ளது. முந்தைய தோல்விக்கு பதிலடி கொடுத்து 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் கோப்பையை வென்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஷேன் வார்னேவுக்கு அர்ப்பணிக்க ஆயத்தமாகி வருகின்றனர் ராஜஸ்தான் அணியினர். டாஸ் வென்ற ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இரு அணிகளின் ஆடும் லெவன்:

குஜராத் டைட்டன்ஸ்: விருத்திமான் சாஹா, சுப்மான் கில், மேத்யூ வேட், ஹர்திக் பாண்டியா, டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், லாக்கி பெர்குசன், யாஷ் தயாள், முகமது ஷமி.

ராஜஸ்தான் டைட்டன்ஸ்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, ஓபேட் மெக்காய், யஸ்வேந்திர சாஹல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com