விளையாட்டு
ஐபிஎல் கொடுத்த அனுபவம்: நெகிழும் ஆப்கான் வீரர்
ஐபிஎல் கொடுத்த அனுபவம்: நெகிழும் ஆப்கான் வீரர்
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணியில் ஆடி வருபவர் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ரஷித் கான். 4 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்ட ரஷித், தான் அதற்கு தகுதியானவன் என்பதை ஒவ்வொரு ஆட்டத்திலும் நிரூபித்து வருகிறார்.
‘இந்த சின்ன வயசுல (ரஷித்தின் வயது 18) எனக்கு பெரிய அனுபவத்தைக் கொடுத்திருக்கு ஐபிஎல். சீனியர் வீரர்களோட விளையாடியது நல்ல அனுபவம். எங்க டீமோட பவுலிங் கோச், முத்தையா முரளிதரன் எனக்கு நம்பிக்கையை விதைச்சுட்டே இருப்பார். அவரோட வார்த்தைகளால கடினமா பயிற்சியில ஈடுபட்டேன். அதற்கு நல்ல பலன் கிடைச்சது. இந்த அனுபவங்களோட ஆப்கானிஸ்தான் டீமுக்குப் போனா, அது அணிக்கு பெரிய பலமா இருக்கும்னு நம்பறேன்’ என்கிறார் ரஷித்.