டாஸ் போடும் போது ஸ்ரேயாஸ் சேட்டை : தோனியின் சிரிப்பலை!

டாஸ் போடும் போது ஸ்ரேயாஸ் சேட்டை : தோனியின் சிரிப்பலை!

டாஸ் போடும் போது ஸ்ரேயாஸ் சேட்டை : தோனியின் சிரிப்பலை!
Published on

சென்னைக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

ஐபிஎல் தொடரின் 52வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே டெல்லியில்
நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. டாஸ் போடும்
நிகழ்வின் போது நாணயத்தை ஸ்ரேயாஸ் ஐயர் சுண்டினார். அப்போது உயரமாக வீசுவதற்கு பதிலாக, முன்னோக்கி வீசிவிட்டார்.
அந்த நாணயம் நேராக கேமரா மேனின் காலடியில் சென்று விழுந்தது. 

இதைக்கண்ட தோனி உடனே சிரிக்கத் தொடங்கிவிட்டார். ஸ்ரேயாஸும் சிரித்தார். பின்னர் நாணயத்தை சென்று பார்த்த போது
தோனி கூறியபடி டாஸ் விழுந்திருந்தது. அதன்படியே அவரும் பந்துவீச தீர்மானித்திருந்தார். அதன்படி டெல்லி அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. அந்த அணியில், பிரித்வி சாவ், ஸ்ரேயாஸ் ஐயர், க்ளென் மேக்ஸ்வெல், விஜய் சங்கர், அபிஷேக் சர்மா, ஹர்ஸர் படேல், அமித் மிஷ்ரா, அவேஷ் கான், சந்தீப், போல்ட் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சென்னை அணியில் வாட்சன், அம்பதி ராயுடு, சுரேஷ் ரெய்னா, சாம் பில்லிங்ஸ், தோனி, ப்ராவோ, ரவீந்திர ஜடேஜா, ஹர்பஜன் சிங், தீபக் சஹார், ஷர்துல் தகூர், லுங்கி கிடி ஆகியோர் விளையாடி வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, டெல்லி அணி 1 விக்கெட் இழப்பிற்கு 7 ஓவர்களில் 47 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியில் பிரித்வி மற்றும் ஸ்ரேயாஸ் களத்தில் உள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com