ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா

ஐபிஎல் கிரிக்கெட்: டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டெல்லி ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நடைபெற்ற இந்தப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் டெல்லி அணி 7 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 39 ரன்கள் குவித்தார். கொலகத்தா அணியில் நைல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பின்னர் 169 எடுத்தால் வெற்றி என களமிறங்கிய  கொல்கத்தா அணியில் துவக்க வீரர்கள் ஏமாற்றமளித்தனர். பின்னர் களமிறங்கிய
யூசுப் பதான் – மனிஷ்பாண்டே இணை அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. 19.5 ஓவரில் அந்த அணி 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியில் அதிகபட்சமாக மனிஷ் பாண்டே (69), யூசுப்பதான் (59) ரன்கள் குவித்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com