ஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா? ரசிகர்கள் அதிர்ச்சி

ஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா? ரசிகர்கள் அதிர்ச்சி
ஐபிஎல் டிக்கெட்: சென்னைப் போட்டி டிக்கெட் கட்டணம் இவ்ளோவா? ரசிகர்கள் அதிர்ச்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சேப்பாக்கத்தில் பங்கேற்கும் போட்டிக்கான டிக்கட் கட்டணம் வெளியாகி இருக்கிறது. 

பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. மும்பையில் நடைபெறும் இதன் தொடக்க போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி யும் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னை சேப்பாக்கத்தில் 7 லீக் போட்டிகளில் பங்கேற்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, சென்னையில் ஆடும் முதல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை சந்திக்கிறது. இந்தப் போட்டி சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் ஏப்ரல் 10 ஆம் தேதி நடக்கிறது. 

இந் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளூரில் மோதும் போட்டிகளுக்கான டிக்கெட் விலை வெளியாகி இருக்கி றது. குறைந்தபட்ச டிக்கெட் கட்டணமாக ரூ.1,300 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதிகப்பட்ச டிக்கெட் விலை ரூ.6,500.  ரூ.1,500, ரூ.2,500, ரூ.4,500, ரூ.5,000 ஆகிய விலைகளிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படுகிறது. ஆன்லைனிலும், ஸ்டேடி யத்தில் உள்ள டிக்கெட் கவுன்ட்டர்களிலும் டிக்கெட் விற்பனை செய்யப்படும். இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

இந்நிலையில் இந்த டிக்கெட் விலை அதிகமாக இருப்பதாகவும் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்றும் ரசிகர்கள் சிலர் கோரிக்கை வைத்துள்ளனர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com