அட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும் இந்திய கேப்டன்கள்!

அட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும் இந்திய கேப்டன்கள்!

அட இந்த வருட ஐபிஎல்-லில் அனைவரும் இந்திய கேப்டன்கள்!
Published on

ஐதராபாத் அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக நியமிக்கப்பட்டால், இந்த வருட ஐபிஎல்  தொடர், அனைத்து அணியையும் இந்திய கேப்டன்களே வழி நடத்தும் அரிதான சீசனாக அமையும்.

ஆஸ்திரேலிய வீரர் பேன்கிராஃப்ட், கேப் டவுனில் நடந்த தென்னாப்ரிக்காவுக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் பந்தை திட்டமிட்டு சேதப்படுத்திய சம்பவம் கிரிக்கெட் உலகை அதிரச் செய்தது. மூத்த வீரர்களின் ஆலோசனைப் படி தான் பந்தின் தன்மையை மாற்ற பேன்கிராஃப்ட் முயன்றதாக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்மித் ஒப்புக்கொண்டார். இதையடுத்து கேப்டன் பதவியில் இருந்து ஸ்மித்தையும், துணை கேப்டன் பதவியில் இருந்து வார்னரையும் நீக்கி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை மேற்கொண்டது. பின்னர் அவர்களுக்கு ஓராண்டு தடை விதித்துள்ளது. பேன்கிராஃப்ட்டுக்கு ஒன்பது மாதம் தண்டனை தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டிக்கான ஆஸ்திரேலிய அணியில் அவர்களுக்குப் பதில் மேக்ஸ்வெல், ரென்ஷா, ஜோ பர்ன்ஸ் சேர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் நிர்வாகமும் ஸ்மித், வார்னர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. ராஜஸ்தான் ரா‌யல்ஸ் அ‌ணியின் கேப்டன் பதவியில் இருந்து ஏற்கனவே ஸ்டீவன் ஸ்மித் நீக்கப்பட்ட நிலையில், ஐதராபாத் அணியும் டேவிட் வார்னரின் கேப்டன் பொறுப்பை பறித்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஸ்டீவன் ஸ்மித் மற்றும் வார்னருக்கு அனுமதியில்லை என ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். 

இதையடுத்து இந்த வருட ஐபிஎல் தொடரில் அரிதான ஒரு நிகழ்வு நடைபெற உள்ளது. அதாவது ஐதராபாத் அணி, வார்னருக்கு பதில் ஷிகர் தவானுக்கு கேப்டன் பதவியை வழங்கினால், இந்த தொடரில் அனைத்து கேப்டன்களும் இந்தியர்களாகவே இருப்பார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (தோனி), பெங்களூர் (விராத் கோலி), கொல்கத்தா (தினேஷ் கார்த்திக்), மும்பை (ரோகித் சர்ம்பா), பஞ்சாப் (அஸ்வின்), ராஜஸ்தான் (ரஹானே), டெல்லி (கவுதம் காம்பீர்). இது ஒரு அரிதான நிகழ்வாகும். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com