ஐபிஎல்: பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தது பெங்களூரு அணி

ஐபிஎல்: பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தது பெங்களூரு அணி
ஐபிஎல்: பஞ்சாப்க்கு எதிரான போட்டியில் பேட்டிங்கை தேர்வு செய்தது பெங்களூரு அணி

ஷார்ஜாவில் இன்று நடைபெறும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பெங்களூரு அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஷார்ஜாவில் இந்திய நேரப்படி இன்று நடைபெறும் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணியும், ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் போட்டிகளில் இவ்விரு அணிகளும் இதுவரை 27 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அவற்றில் பஞ்சாப் 15 முறையும், பெங்களூரு 12 முறையும் வெற்றி பெற்றுள்ளன. பஞ்சாப் அணி வெற்றி பெற்றால் மட்டுமே ஃபிளே ஆஃபிற்கான போட்டியில் நீடிக்க முடியும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com