ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் மோதல்

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் மோதல்

ஐபிஎல் 2023 அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் மோதல்
Published on

ஐபிஎல் 2023 போட்டியின் முதல் ஆட்டத்தில் சென்னை - குஜராத் அணிகள் மோதவுள்ளன.

ஐபிஎல் 2023 தொடருக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது. வரும் மார்ச் 31 அன்று தொடங்கும் ஐபிஎல் தொடர் மே 28 அன்று நிறைவுபெறுகிறது. இந்த சீசனில் மொத்தம் 12 மைதானங்களில் போட்டிகள் நடைபெறுகின்றன. மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. லீக் ஆட்டங்கள் மே 21ம் தேதி நிறைவடைகின்றன. இறுதிப்போட்டி மே 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும்.

முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி அகமதாபாத்தில் நடக்கிறது. இரண்டாவது நாளில் இரண்டு ஆட்டங்கள் நடக்கின்றன. ஒரு ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், டெல்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு களமிறங்குகின்றன. இதில் குரூப் ஏ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், டெல்லி கேபிடல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும் குரூப் பி பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்,  குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடம்பிடித்துள்ளன.

ஏப்ரல் 3 அன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் லக்னோ அணிக்கு எதிராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. இதனால் 3 ஆண்டுகளுக்குப் பிறகு சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடவுள்ளது. சென்னையில் கடைசியாக விளையாடி ஐபிஎல் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவேன் என தோனியும் தனது விருப்பத்தை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com