பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கு தமிழக வீரர் உள்பட 3 பேர் பரிசீலனை - யார் அவர்கள்?

பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கு தமிழக வீரர் உள்பட 3 பேர் பரிசீலனை - யார் அவர்கள்?
பெங்களூரு அணியின் கேப்டன் பதவிக்கு தமிழக வீரர் உள்பட 3 பேர் பரிசீலனை - யார் அவர்கள்?

15-வது ஐபிஎல் சீசன் துவங்க சில நாட்களே உள்ளநிலையில், பெங்களூரு அணி மட்டும் இன்னும் அந்த அணியின் புதிய கேப்டன் யார் என்பது குறித்து அறிவிப்பதில் காலதாமதம் நிலவி வருகிறது.

2022-ம் ஆண்டுக்கான 15-வது ஐபிஎல் சீசன், வரும் 26-ம் தேதி துவங்கி, மே மாதம் 29-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த ஐபிஎல் போட்டியில், புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளதை அடுத்து, 10 அணிகளும் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு அண்மையில் அட்டவனை வெளியிடப்பட்டது. இந்த தலா ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகளில் மோதுகிறது.

இதையடுத்து ஒவ்வொரு அணியின் அந்த நாளுக்கு ஒரு அப்பேட் கொடுத்து வருகிறது. புதிதாக சேர்க்கப்பட்டுள்ள அகமதாபாத், லக்னோ அணிகள் கூட தங்களது அணியின் கேப்டன்களை அறிவித்து விட்டன. ஆனால் ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து இருக்கும் பெங்களூரு அணி மட்டும் இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை.

பெங்களூரு அணியில் தொடக்க காலத்தில் இருந்தே விளையாடி வரும் விராட் கோலி கடந்த 7 ஆண்டுகளாக கேப்டனாகவும் பதவி வகித்து வந்தார். ஆனால் அவரால் ஐபிஎல் கோப்பையை வெல்லவே முடியவில்லை. இதனால் ஏற்பட்ட அழுத்தம் காரணமாக கடந்தாண்டு சீசனுடன் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால் நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியின் கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் அனைத்து அணிகளும் தங்களது கேப்டன்களுடன் போட்டித் தொடரை எதிர்கொள்ள தயாராகி வரும் நிலையில் பெங்களூரு அணி தடுமாறி வருகிறது. இந்நிலையில், அந்த அணியில் கேப்டன்சி பதவிக்கு 3 பேர் பரிசீலனையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன் காரணமாகவே கேப்டன்சி விஷயத்தில் தாதமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி, ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ், தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் ஆகியோர் கேப்டன்சி பதவிக்கு, அந்த அணியின் நிர்வாகக் குழு ஆலோசித்து வருகிறது. இதில் ஆஸ்திரேலிய வீரர் கிளன் மேக்ஸ்வெல், தென்னாப்பிரிக்க வீரர் டூ பிளசிஸ் ஆகிய இருவருக்கும், அணியை தலைமை தாங்கிய அனுபவம் இருப்பதாக பெங்களூரு அணி கருதுகிறது.

இதேபோல் தினேஷ் கார்த்திக் ஆர்சிபி அணிக்காக 2015-ம் ஆண்டு ஐபிஎல்லில் விளையாடியுள்ளார். மேலும் கொல்கத்தா அணிக்கு தலைமை தாங்கியுள்ளதால் அவர் பெயரும் பரிசீலனையில் உள்ளது. ஆனால், கிளன் மேக்ஸ்வெல் தனது திருமணத்தை முன்னிட்டு, ஏப்ரல் 6-ம் தேதி வரை ஐபிஎல்லில் பங்கேற்க மாட்டார் என்று கூறியுள்ளார். இதனால் அவர் பெயர் கேப்டன்சிக்கு பரிந்துரைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆர்சிபி அணியின் மூத்த அதிகாரி தெரிவிக்கையில், எங்களிடம் கேப்டன்சிக்கு தேவையான ஏராளமான வீரர்கள் உள்ளனர். அனைவரும் மிகவும் திறமையான கேப்டன்கள். கோலியையும் ஆர்சிபியையும் தினேஷுக்கு நன்கு தெரியும். மேக்ஸ்வெல் ஒரு வருடமாக எங்கள் அணியில் இருக்கிறார். இதேபோல் டூ பிளசிஸ் தென்னாப்பிரிக்காவின் ஒரு அற்புதமான கேப்டனாக இருந்தார். ஆனால் எங்களுக்கு யார் சிறந்தவர் என்பதை நாங்கள் தீர்மானிக்க வேண்டும். விரைவில் கேப்டன் தேர்வு குறித்த தகவல் வரும்” என்று கூறியுள்ளார்.

ஐபிஎல் 2022 அணி கேப்டன்கள்:

1. சென்னை சூப்பர் கிங்ஸ்  - எம்எஸ் தோனி

2. டெல்லி கேபிடல்ஸ்  - ரிஷப் பந்த்

3. குஜராத் டைட்டன்ஸ்  - ஹர்திக் பாண்டியா

4. கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  - ஷ்ரேயாஸ் ஐயர்

5. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்  - கேஎல் ராகுல்

6. மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் சர்மா

7. பஞ்சாப் கிங்ஸ்  - மயங்க் அகர்வால்

8. ராஜஸ்தான் ராயல்ஸ்  - சஞ்சு சாம்சன்

9. சன்ரைசர்ஸ் ஹைதராபாத்  - கேன் வில்லியம்சன்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com