21-வது லீக்: 4-வது தொடர் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத் - சன்ரைசர்ஸ் பவுலிங் தேர்வு

21-வது லீக்: 4-வது தொடர் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத் - சன்ரைசர்ஸ் பவுலிங் தேர்வு
21-வது லீக்: 4-வது தொடர் வெற்றியை பதிவு செய்யுமா குஜராத் - சன்ரைசர்ஸ் பவுலிங் தேர்வு

15-வது சீசன் ஐபிஎல் போட்டியில், குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

2022-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி, கடந்த 26-ம் தேதி முதல் மும்பை மற்றும் புனே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதுவரை 20 சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ளன. இந்நிலையில், டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 21-வது சூப்பர் லீக் போட்டியில், குஜராத் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கேன் வில்லியம்சம் பவுலிங்கை தேர்வு செய்துள்ளார். இதையடுத்து ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி பேட்டிங்கில் களமிறங்குகிறது.

குஜராத் அணியை பொறுத்தவரை அறிமுக அணி என்று சொல்ல முடியாத அளவுக்கு அபாரமாக விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 3 போட்டிகளையும் வென்று அசத்தியுள்ளது குஜராத். இதனால் இந்தப் போட்டியையும் வெல்லும் முனைப்புடன் களமிறங்க உள்ளது.

சன் ரைசர்ஸ் அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு பிறகு ஒருவழியாக வெற்றிப்பாதைக்கு சமீபத்தில் தான் திரும்பியது. ராஜஸ்தான், லக்னோ அணிகளுக்கு எதிராக படுதோல்வியை தழுவிய அந்த அணி, சென்னை அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது. அதே வெற்றிப் பயணத்தை தொடரும் முனைப்பில் இந்த ஆட்டத்திலும் சன் ரைசர்ஸ் அணி களமிறங்குகிறது. இரு அணிகளிலும் மாற்றமின்றி வீரர்கள் களமிறங்குகின்றனர்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

அபிஷேக் சர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ஷஷாங்க் சிங், வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், மார்கோ ஜான்சன், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

குஜராத் டைட்டன்ஸ்:

மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, அபினவ் மனோகர், ரஷித் கான், லாக்கி பெர்குசன், முகமது ஷமி, தர்ஷன் நல்கண்டே.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com