மனைவிக்கு பிரசவம்: நாடு திரும்புகிறார் கேன் வில்லியம்சன் -சன்ரைஸர்ஸ் அடுத்த கேப்டன் யார்?

மனைவிக்கு பிரசவம்: நாடு திரும்புகிறார் கேன் வில்லியம்சன் -சன்ரைஸர்ஸ் அடுத்த கேப்டன் யார்?
மனைவிக்கு பிரசவம்: நாடு திரும்புகிறார் கேன் வில்லியம்சன் -சன்ரைஸர்ஸ் அடுத்த கேப்டன் யார்?

கேன் வில்லியம்சனின் மனைவிக்கு பிரசவ தேதி நெருங்கியுள்ளதால் அவர் நியூசிலாந்து திரும்ப உள்ளதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கேப்டன் கேன் வில்லியம்சனின் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. அவருக்கு பிரசவ தேதி நெருங்கி விட்டது. இதனால் தனது மனைவியுடன் இருப்பதற்காக கேன் வில்லியம்சன் நியூசிலாந்து திரும்ப உள்ளார். இதனால் அவர் ஹைதராபாத்  அணிக்கு மீதமுள்ள கடைசி லீக் ஆட்டத்தில் விளையாட மாட்டார்.

இதுகுறித்து சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், ''எங்கள் கேப்டன் கேன் வில்லியம்சன்  நியூசிலாந்து திரும்புகிறார். அவரது மனைவிக்கு நல்லபடியாக பிரசவம் நடக்கவும், கேன் வில்லியம்சன் மகிழ்ச்சியில் திளைக்கவும் நாங்கள் அனைவரும் வாழ்த்துகிறோம்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனையடுத்து சன்ரைஸர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் யாராக இருப்பார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

இதையும் படிக்கலாம்: மும்பையை வீழ்த்தி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com