முதல் போட்டியில் CSKvKKR : ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ-முழு விவரம்

முதல் போட்டியில் CSKvKKR : ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ-முழு விவரம்
முதல் போட்டியில் CSKvKKR : ஐபிஎல் போட்டிகளுக்கான அட்டவணையை வெளியிட்டது பிசிசிஐ-முழு விவரம்

நடப்பாண்டு ஐபிஎல் லீக் போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மார்ச் 26 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கொல்கத்தாவை வான்கடே மைதானத்தில் எதிர்கொள்கிறது. மறுநாள், டெல்லியை அணியை மும்பை அணி எதிர்கொள்ள உள்ளது. விறுவிறுப்பாக நடைபெற உள்ள இந்த ஐபிஎல்லின் இறுதிப்போட்டி மே 29 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 10 அணிகள் 14 லீக் போட்டிகளில் விளையாட உள்ளன. இதில் 7 போட்டிகள் அந்தந்த அணியின் சொந்த நாட்டில் நடைபெறும். மொத்தம் 70 போட்டிகள், 4 ப்ளே ஆஃப் ஆட்டங்கள் என ஐபிஎல் சூடுபிடிக்க உள்ளது. ஒவ்வொரு அணியும் ஐந்து அணிகளுடன் இரண்டு முறையும், மீதமுள்ள நான்கு அணிகள் ஒரு முறையும் விளையாடும்.

மும்பையின் வான்கடே ஸ்டேடியம் மற்றும் டி.ஒய்.பாட்டீல் ஸ்டேடியத்தில் அனைத்து அணிகளும் தலா நான்கு போட்டிகளிலும், மும்பையின் பிரபோர்ன் ஸ்டேடியம் (சிசிஐ), புனே மற்றும் எம்சிஏ சர்வதேச மைதானத்தில் தலா மூன்று போட்டிகளிலும் விளையாடும்.

பிளேஆஃப் போட்டிக்கான இடங்கள் பின்னர் முடிவு செய்யப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com