ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?

ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?
ஐபிஎல் 2022: புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள 'ஸ்ட்ரைக் - ரொட்டேஷன்' விதி என்ன சொல்கிறது?

வரும் 26-ஆம் தேதி 15-வது ஐபிஎல் சீசன் தொடங்க உள்ளது. இந்த சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடுகின்றன. இந்நிலையில் ஸ்ட்ரைக் - ரொட்டேஷன் விதி என்ற புதிய கிரிக்கெட் விதியை இந்த சீசனில் அறிமுகம் செய்துள்ளது ஐபிஎல் நிர்வாகக்குழு. அண்மையில் உலகின் பழமையான கிரிக்கெட் கிளப்களில் ஒன்றான Marylebone கிரிக்கெட் கிளப் சில விதிகளை அறிமுகம் செய்திருந்தது. அதில் ஒன்று தான் இந்த ஸ்ட்ரைக் - ரொட்டேஷன் விதி. 

என்ன சொல்கிறது ஸ்ட்ரைக் - ரொட்டேஷன் விதி?

கிரிக்கெட் போட்டிகளில் ஒரு பேட்ஸ்மேன் எதிரணியினரிடம் கேட்ச் கொடுத்து அவுட்டாகும் பட்சத்தில் ஸ்ட்ரைக்கில் இருந்த அந்த பேட்ஸ்மேனும், நான்-ஸ்ட்ரைக்கர் எண்டிலிருக்கும் மற்றொரு பேட்ஸ்மேனும் ஒருவரை ஒருவர் எதிரெதிராக ஓட்டம் எடுத்து கடந்து விட்டால் (Cross) அடுத்த பந்தில் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டிலிருந்த பேட்ஸ்மேன் ஸ்ட்ரைக்கிற்கு வந்துவிடுவார். புதிதாக வரும் பேட்ஸ்மேன் நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருப்பார். ஆனால் இனி அப்படி செய்யமுடியாது என்பதை சொல்லவே ஸ்ட்ரைக் - ரொட்டேஷன் விதி அறிமுகமாகி உள்ளது. இது 18.11 விதி என்று அழைக்கப்படுகிறது. 

இந்த விதியின் மூலம் பேட்ஸ்மேன்கள் கிராஸ் செய்தாலும் புதிய பேட்ஸ்மேன் தான் ஸ்ட்ரைக்கில் விளையாட வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது. இருந்தாலும் இந்த விதி ஓவரின் கடைசி பந்துக்கு பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகம்!

இந்த விதி சர்வதேச கிரிக்கெட் களத்தில் வரும் அக்டோபர் முதல் அறிமுகமாகும் என தெரிகிறது. இந்த நிலையில் தற்போது நேரடியாக 15-வது ஐபிஎல் சீசனில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் ஜிம்மி நீஷம் இந்த விதியை பகிரங்கமாக விமர்சித்துள்ளார். “தனக்கு இந்த விதி சொல்வது சுத்தமாக விளங்கவில்லை” என தெரிவித்துள்ளார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com