ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்று மும்பை அணி பவுலிங் தேர்வு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்று மும்பை அணி பவுலிங் தேர்வு
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டம் - டாஸ் வென்று மும்பை அணி பவுலிங் தேர்வு

15-வது சீசன் ஐபிஎல் டி20 போட்டியின் இன்றைய முதல் ஆட்டத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.

கடந்த 26-ம் தேதி முதல் மகாராஷ்டிராவில் 15-வது சீசன் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் 9-வது லீக் போட்டியான இன்றைய முதல் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற அணி மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகிச் சர்மா பவுலிங்கை தேர்வு செய்துள்ளார்.

இதையடுத்து, சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , பேட்டிங்கில் களமிறங்குகிறது. ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று, வெற்றிகரமான அணியாக வலம் வரும் மும்பை அணிக்கு, இந்தாண்டு தொடக்கமும் பின்னடைவாகவே இருந்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்தது. இதனையடுத்து 2-வது போட்டியிலாவது வெற்றி கணக்கை தொடங்க வேண்டும் என்ற முனைப்புடன் மும்பை அணி களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணி முதல் ஆட்டத்தில் ஐதராபாத்தை 61 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது. இதனால் மும்பை அணியை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் களமிறங்குகிறது.

மும்பை அணி வீரர்கள் விவரம்:

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), அன்மோல்ப்ரீத் சிங், திலக் வர்மா, பொல்லார்டு, டிம் டேவிட், டேனியல் சாம்ஸ், முருகன் அஸ்வின், டைமல் மிலஸ், பும்ரா, பாசில் தம்பி

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் விவரம்:

சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், ஹெட்மயர், ரியான்,  நவ்தீவ் சைனி, ரவிசந்திரன் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், டிரென்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com