தோனி இதற்காகத்தான் பேட்டை கடிக்கிறாரா? - விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா

தோனி இதற்காகத்தான் பேட்டை கடிக்கிறாரா? - விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா
தோனி இதற்காகத்தான் பேட்டை கடிக்கிறாரா? - விளக்கம் கொடுத்த அமித் மிஸ்ரா

தோனி ஏன் பேட்டை அடிக்கடி கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி ஓபனிங் இறங்கிய ருதுராஜ் கெய்க்வாட் 41 (33), டிவோன் கான்வே 87 (49) இருவரும் சிறப்பான துவக்கம் தந்தனர். இதையடுத்து வந்த ஷிவம் துபேவும் தன் பங்கிற்கு அதிரடியில் கலக்கினார். இதன்பின்னர் ராயுடு வந்த வேகத்தில் 5 ரன்களில் வெளியேற, கேப்டன் தோனி 5வது வீரராக களமிறங்கினார். எதிர்கொண்ட 2வது பந்திலேயே சிக்சர் விளாசிய தோனி, நோக்கியா வீசிய கடினமான பந்தில் பேட்டை வளைத்து சிக்சருக்கு அனுப்பினார். இந்தப் போட்டியில் தோனி 8 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முன்னதாக தோனி களமிறங்குவதற்கு முன்பு பெவிலியனில் காத்திருந்தபோது தனது பேட்டை பல்லால் கடித்துக் கொண்டிருந்தார். இது தொடர்பான காட்சிகள் கேமராவில் பதிவாகின. தோனி ஏன் பேட்டை கடிக்கிறார் என பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அமித் மிஸ்ரா வெளியிட்ட ட்விட்டர் பதிவில், ''தோனி ஏன் அடிக்கடி தனது பேட்டை கடிக்கிறார்'என்று நீங்கள் யோசித்திருப்பீர்கள். அவர் தனது பேட்டை சுத்தமாக வைத்துக் கொள்வதற்காக, பேட்டில் உள்ள டேப்பை கடித்து அகற்றுகிறார். தோனியின் பேட்டில் டேப் அல்லது நூல் இருப்பதை நீங்கள் எப்போதுமே பார்த்திருக்க மாட்டீர்கள்'' என்று அவர் பதிவிட்டுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனுக்கான ஏலத்தில் எந்தவொரு அணியும் அமித் மிஸ்ராவை வாங்கவில்லை. அதன் காரணமாக ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக விளையாடாமல் போட்டிகளை வெளியிலிருந்து கவனித்து வருகிறார் அவர்.

இதையும் படிக்கலாம்: மாஸ் வெற்றியை பதிவுசெய்த சிஎஸ்கே... புள்ளிப் பட்டியலில் முன்னேற்றம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com