2022 ஐ.பி.எல். மெகா ஏலம் : குறைந்த விலைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள்

2022 ஐ.பி.எல். மெகா ஏலம் : குறைந்த விலைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள்
2022 ஐ.பி.எல். மெகா ஏலம் : குறைந்த விலைக்கு எடுக்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள்

அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட வெளிநாட்டு வீரர்கள், 15-வது ஐ.பி.எல். போட்டியில் குறைந்த விலைக்கு எடுக்கப்பட்டுள்ளனர்.

2015-ம் ஆண்டு ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டதே அதிக தொகையாக இருந்த நிலையில், ஐபிஎல் 2020 சீசனுக்கான ஏலத்தின்போது, ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸை ஏலத்தில் எடுக்க கடும் போட்டி நிலவியது.

டெல்லி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என பல அணிகள் மோதிய போதிலும், இறுதியில் ரூ. 15.5 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ். அந்த அணியில் விடுவிக்கப்பட்ட அவர், தற்போது இந்த 15-வது ஐ.பி.எல். ஏலத்தில் பேட் கம்மின்ஸ் ரூ. 7.25 கோடிக்கு அதே அணி மீண்டும் அவரை குறைந்த விலைக்கு எடுத்துள்ளது. ரூ. 8 கோடிக்கு  டிரெண்ட் போல்ட்டை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும்,  சென்னையின் முன்னாள் வீரரான டூ பிளசிஸை ரூ. 7 கோடிக்கு பெங்களூரூ அணியும் எடுத்துள்ளது.

லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணி, தென்னாப்பிரிக்க வீரரான குயின்டன் டி காக்கை ரூ. 6.75 கோடிக்கும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் கேப்டனும், ஆஸ்திரேலிய வீரருமான டேவிட் வார்னர் ரூ. 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் எடுத்துள்ளது. எனினும் தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான ரபடாவை, பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 9. 25 கோடிக்கு எடுத்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com