'நாங்க அவரை மிஸ் பண்றோம்' - ஷேன் வார்னே குறித்து கண்ணீர் விட்டு அழுத பட்லர்

'நாங்க அவரை மிஸ் பண்றோம்' - ஷேன் வார்னே குறித்து கண்ணீர் விட்டு அழுத பட்லர்
'நாங்க அவரை மிஸ் பண்றோம்' - ஷேன் வார்னே குறித்து கண்ணீர் விட்டு அழுத பட்லர்

ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்பு ஷேன் வார்னேவை நினைத்து ஜோஸ் பட்லர் கண்ணீர்விட்டு அழுத வீடியோ வெளியாகியுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது குஜராத் டைட்டான்ஸ் அணி . 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி கோப்பையைத் தவறவிட்டிருக்கிறது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்த நிலையில், இப்போட்டிக்கு முன்னதாக ராஜஸ்தான் வீரர்களிடம் பேட்டி காணப்பட்டது. அதில் ஐபிஎல் இறுதிப் போட்டி குறித்து ஜோஸ் பட்லரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது ஷேன் வார்னே குறித்து பேசிய ஜாஸ் பட்லர் திடீரென கண்ணீர் விட்டுத் தேம்பித்தேம்பி அழுதார்.

ராஜஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான ஷேன் வார்னே சமீபத்தில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இவர் தலைமையிலான ராஜஸ்தான் அணி, கடந்த 2008-ம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை வென்றது. அதன்பின் 14 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு ராஜஸ்தான் அணி முன்னேறியுள்ளது. அதனால் இதுபோன்ற தருணங்களில் ஷேன் வார்னே இல்லையே என பட்லர் கண்கலங்கினார்.

இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில், ''ஷேன் வார்னே எங்களை பார்த்துக் கொண்டிருப்பார். அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு மிகவும் செல்வாக்கு மிக்கவர். முதல் சீசனில் அணியை வெற்றிக்கு அழைத்து சென்றவர். நாங்கள் அவரை தவறவிடுகிறோம். இந்த நேரத்தில் அவர் எங்களுடன் இல்லை என்பதை நினைக்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது'' என்றார்.

இதையும் படிக்கலாம்: 'ராஜஸ்தான் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்' - சஞ்சு சாம்சன் உருக்கம்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com