தோனி, ரெய்னாவிற்குப் பிறகு புதிய சாதனை படைக்கும் ஜடேஜா

தோனி, ரெய்னாவிற்குப் பிறகு புதிய சாதனை படைக்கும் ஜடேஜா
தோனி, ரெய்னாவிற்குப் பிறகு புதிய சாதனை படைக்கும் ஜடேஜா

ஐபிஎல் டி20 போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 150-வது ஆட்டத்தில் விளையாட உள்ளார், அந்த அணியின் கேப்டனான ரவீந்திர ஜடேஜா.

2022-ம் ஆண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி கடந்த 26-ம் தேதி முதல் மும்பை மற்றும் புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பிளே ஆஃப் சுற்றுக்காக புள்ளி பட்டியலில் இடம்பிடிப்பதில் தற்போது அணிகளுக்கிடையே பெரும் போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், சென்னை அணியின் நீண்ட நாள் வீரரான ரவீந்திரா ஜடேஜா புதிய சாதனை படைக்க உள்ளார். நாளை மதியம் 3.30 மணிக்கு, நவிமும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெறும் 17-வது லீக் போட்டியில், சன்ரைசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது சென்னை அணி. கடந்த 2012-ம் ஆண்டு முதல் சென்னை அணியில் முக்கிய பங்கு வகிக்கும் ஜடேஜாவிற்கு, இந்த ஆட்டம் 150-வது போட்டியாகும்.

இதற்கு முன்பு ஐபிஎல் போட்டி ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து சென்னை அணிக்காக ஆடி வரும் தோனி இதுவரை 217 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இதேபோல் மற்றொரு வீரராக இருந்த சுரேஷ் ரெய்னாவும் 200 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக 3-வது வீரராக தற்போது ஜடேஜா உள்ளார்.

சென்னை அணியில், தோனி, ரெய்னாவிற்குப் பிறகு (தற்காலிக கேப்டன்) 3-வது கேப்டனாக பதவி வகித்து வருபவர் ரவீந்திர ஜடேஜாதான். இதேபோல் சென்னை அணியில் அதிகளவில் விக்கெட் எடுத்த வீரர்களில் 3-வது வீரராக ஜடேஜா தான் உள்ளார்.

இதுவரை சென்னை அணிக்காக அவர் ஆடிய 149 போட்டிகளில் 110 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். 1,523 ரன்கள் எடுத்துள்ளார். கடந்த வருடம் பெங்களூரு அணிக்கு எதிரானப் போட்டியில், 28 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றிபெற உதவிபுரிந்தார். குறிப்பாக அந்த ஆட்டத்தில் ஹர்ஷல் பட்டேல் பந்துவீசிய ஒரே ஓவரில் 36 ரன்கள் எடுத்து ஆட்டத்தின் போக்கையே மாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com