ஐபிஎல் 2022: லீக் போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களும் பின்னணியும்!

ஐபிஎல் 2022: லீக் போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களும் பின்னணியும்!
ஐபிஎல் 2022: லீக் போட்டிகள் நடைபெற உள்ள மைதானங்களும் பின்னணியும்!

வரும் 26-ஆம் தேதி அன்று ஆரம்பமாக உள்ள 15-வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 10 அணிகள் விளையாடவுள்ளன. கொரோனா பரவல் முன்னெச்சரிக்கை காரணமாக இந்த சீசனின் லீக் சுற்று போட்டிகள் அனைத்தும் நான்கு மைதானங்களில் மட்டுமே நடைபெற உள்ளன. மும்பையில் உள்ள வான்கடே மைதானம், பிரபோர்ன் (Brabourne) மைதானம், நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானம் மற்றும் புனேவில் உள்ள மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறுகிறது. 

இதில் வான்கடே மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தலா 20 போட்டிகளும், பிரபோர்ன் மற்றும் மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க (எம்.சி.ஏ) மைதானத்தில் தலா 15 போட்டிகளும் நடைபெறவுள்ளது. ஒவ்வொரு அணியும் வான்கடே மற்றும் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் தலா 4 போட்டிகளில் விளையாடும். மீதமுள்ள இரண்டு மைதானங்களில் தலா 3 போட்டிகளில் விளையாடும் என சொல்லப்பட்டுள்ளது. 

லீக் சுற்றில் டாஸ் வெல்லும் கேப்டன்கள் பிரபோர்ன் மைதானம் நீங்கலாக மற்ற அனைத்து மைதானங்களிலும் முதலில் பந்து வீசவே முடிவு செய்வார்கள் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இதற்கு முன்னர் இந்த மைதானங்களில் நடைபெற்ற போட்டிகளில் ஆட்டத்தின் முடிவு இரண்டாவதாக பேட் செய்த அணிகளுக்கே சாதகமாக அமைந்துள்ளது. 

அதிகபட்சமாக வான்கடே மைதானத்தில் 83 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. அதில் 43 முறை இரண்டாவதாக பேட் செய்த அணியே வெற்றி பெற்றுள்ளது. எம்.சி.ஏ மைதானத்தில் மொத்தம் 38 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் 20 முறை இரண்டாவதாக பேட் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது. அதே போல டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற 17 ஐபிஎல் போட்டிகளில் 10 முறை இரண்டாவதாக பேட் செய்த அணியும், பிரபோர்ன் மைதானத்தில் நடைபெற்ற 11 போட்டிகளில் 6 முறை முதலாவதாக பேட் செய்த அணியும் வென்றுள்ளது. 

நான்கு மைதானங்களையும் சேர்த்து அதிகபட்சமாக ஆர்.சி.பி அணி ஒரே போட்டியில் 235 ரன்களை குவித்துள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com