பிளே-ஆஃப் 1 : டாஸ் வென்ற தோனி பவுலிங் தேர்வு! ரெய்னா இல்லாமல் மீண்டும் களமிறங்கும் சிஎஸ்கே
நடப்பு ஐபிஎல் சீசனில் முதல் பிளே-ஆஃப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் விளையாடுகின்றன. துபாய் மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி, பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
இரு அணிகளும் ஐபிஎல் அரங்கில் 25 முறை நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் சென்னை 15 போட்டிகளிலும், டெல்லி 10 போட்டிகளிலும் வென்றுள்ளன. கடைசியாக இரு அணிகளும் விளையாடிய நான்கு போட்டிகளில் டெல்லி, சென்னையை வீழ்த்தியுள்ளது.
ஆடும் லெவன் விவரம்...
சென்னை சூப்பர் கிங்ஸ்!
ருதுராஜ் கெய்க்வாட், டூப்ளசிஸ், மொயின் அலி, ராபின் உத்தப்பா, அம்பதி ராயுடு, தோனி (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட்
டெல்லி கேபிடல்ஸ்!
ஷிகர் தவான், பிருத்வி ஷா, ரிஷப் பந்த் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷ்ரேயஸ் ஐயர், ஹெட்மயர், அக்ஸர் பட்டேல், ரவிச்சந்திரன் அஸ்வின், ககிசோ ரபாடா, டாம் கர்ரன், ஆவேஷ் கான், அன்ரிச் நோர்க்யா.
இந்த போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும். தோற்கும் அணி இரண்டாவது பிளே-ஆஃப் போட்டியில் விளையாட வேண்டும்.