ஐபிஎல் 2021 புதிய விதிகள் : ‘சாப்ட் சிக்னல்’ இல்லை!

ஐபிஎல் 2021 புதிய விதிகள் : ‘சாப்ட் சிக்னல்’ இல்லை!

ஐபிஎல் 2021 புதிய விதிகள் : ‘சாப்ட் சிக்னல்’ இல்லை!
Published on

எதிர்வரும் ஏப்ரல் 9ஆம் தேதி அன்று நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் ஆரம்பமாக உள்ளது. இந்நிலையில் இந்த சீசனுக்கான புதிய விதிகளை வெளியிட்டுள்ளது பிசிசிஐ. அந்த வகையில் இந்த ஆண்டு டிவி அம்பயர் பரிசீலனைக்கு வரும் முடிவுகளில் சாப்ட் சிக்னல் விதிமுறை இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிவி அம்பயர் சொல்வதே இறுதி முடிவாகும். 

அண்மையில் முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சாப்ட் சிக்னல் தொடர்பான சர்ச்சை எழுந்திருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

மேலும் கள நடுவர்கள் எடுக்கின்ற ஷார்ட் ரன் மற்றும் நோ பால் தொடர்பான முடிவுகளிலும் மூன்றாவது அம்பயர்கள் குறுக்கிடலாம் என தெரிவிக்கபட்டுள்ளது. மேலும் இரண்டு இன்னிங்ஸின் இறுதி ஓவரான இருபதாவது ஓவர் ஆட்டத்தின் 90 நிமிடங்களுக்குள் வீசியாக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் 90வது நிமிடத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ இருபதாவது ஓவர் வீசினால் போதும் என இருந்தது. இது ஆட்டத்தின் நேரத்தை குறைக்கும் பொருட்டு எடுதுள்ளதாக தெரிகிறது. 

சாப்ட் சிக்னல்?

கிரிக்கெட்டில் நெருக்கடியான முடிவுகளை கள அம்பயர்கள் எடுக்கும் போது அதை சாப்ட் சிக்னல் என சொல்வது வழக்கம். உதாரணமாக ரன் அவுட் தொடர்பான முடிவுகள், குளோஸ் கேட்ச் குறித்த முடிவுகளை எடுக்கும் போது அம்பயர்கள் தங்கள் உள்ளுணர்வு சொல்லும்படி அவுட் அல்லது நாட் அவுட் என அறிவிப்பர். சமயங்களில் டிவி அம்பயரின் பரிசீலனைக்கும் அம்பயர்கள் செல்வதுண்டு. இருந்தாலும் ஐசிசி விதிப்படி சாப்ட் சிக்னல் விவகாரத்தில் கள அம்பயரின் முடிவே இறுதியானது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com