ஐபிஎல் 2021 : எலிமினேட்டர் போட்டி - டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

ஐபிஎல் 2021 : எலிமினேட்டர் போட்டி - டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு
ஐபிஎல் 2021 : எலிமினேட்டர் போட்டி - டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் விளையாடுகின்றன. ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் கோலி, பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளும் இது வரை 28 முறை நேருக்கு நேர் மோதி விளையாடி உள்ளன. அதில் கொல்கத்தா 15 போட்டிகளிலும், பெங்களூர் 13 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக விளையாடிய போது கொல்கத்தா வெற்றி பெற்றிருந்தது. அபுதாபியில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் 19 ஓவர்களில் வெறும் 92 ரன்களில் பெங்களூர் அணியை ஆல்-அவுட் செய்திருந்தது கொல்கத்தா. 

ஆடும் லெவன் விவரம்... 

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

ஷூப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ராகுல் திரிபாதி, இயோன் மோர்கன் (கேப்டன்), தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷாகிப் அல் ஹசன், சுனில் நரைன், லோக்கி பெர்குசன், சிவம் மாவி, வருண் சக்கரவர்த்தி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்!

விராட் கோலி (கேப்டன்), தேவ்தத் படிக்கல், ஸ்ரீகர் பரத் (விக்கெட் கேபிபார்), மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ், டேனியல் கிறிஸ்டியன், ஷாபாஸ் அகமது, ஜார்ஜ் கார்டன், ஹர்ஷல் பட்டேல், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com