\
‘இந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. ஆனால் அது சி.எஸ்.கே இல்லை’ பெட்டிங் ஆர்வலர்கள் கணிப்பு

‘இந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. ஆனால் அது சி.எஸ்.கே இல்லை’ பெட்டிங் ஆர்வலர்கள் கணிப்பு

‘இந்த அணி தான் கோப்பையை வெல்லும்.. ஆனால் அது சி.எஸ்.கே இல்லை’ பெட்டிங் ஆர்வலர்கள் கணிப்பு
Published on

கிரிக்கெட்டும் பெட்டிங்கும் இரண்டற கலந்தது. இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கிய மங்காத்தா படத்தில் வரும் காட்சிகள் போல நிஜத்திலும் பெட்டிங் நடப்பது வாடிக்கை தான். குறிப்பாக சர்வதேச தொடர்கள் என்றால் அதில் பத்து ரூபாயில் ஆரம்பித்து பல கோடி ரூபாய் வரை பெட்டிங் நடக்கும். 

அந்த வகையில் வரும் சனிக்கிழமை ஆரம்பமாக உள்ள ஐபிஎல் தொடரில் எந்த அணி கோப்பையை வெல்லும் என்பதில் ஆரம்பித்து, சிறந்த பேட்ஸ்மேன்கள், சிறந்த பவுலர்கள் என அனைத்தயும் இப்போதே கணித்துள்ளனர் பெட்டிங் ஆர்வலர்கள். 

CRICKETICS.IN என்ற பெட்டிங் தளத்தில் மும்பை மற்றும் சென்னை அணி தான் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து சன்ரைசர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி அதற்கடுத்த இடங்களை பிடிக்கலாம் எனவும் அதில் பெட் கட்டியவர்கள் தெரிவித்துள்ளனர். கே.கே.ஆர், ஆர்.சி.பி, ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கடைசி நான்கு இடங்களை பிடிக்கும் என சொல்லப்பட்டுள்ளது. 

SportsPesa என்ற தளத்தில் மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் அணி முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் கொல்கத்தா அணி அதற்கடுத்த இடங்களை பிடிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது. 

உலகளவில் டாப் பெட்டிங் தளங்களாக உள்ள BET365, BETWAY, WILLIAM HILLS, BETFAIR மாதிரியானவை மும்பை தான் இம்முறை கோப்பையை  வெல்லும் என இதற்கு முன்னதாக கணித்திருந்தது.

அபுதாபியில் வரும் சனிக்கிழமை அன்று நடக்க உள்ள சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான தொடரின் முதல் போட்டியில் மும்பை தான் வெல்லும் என BET365 சொல்லியுள்ளது.

பேட்டிங்கில் கோலியும், ரோகித் ஷர்மாவும் ரன் குவிப்பில் ஈடுபடுவார்கள். பவுலிங்கில் பும்ரா, ஆர்ச்சர் மற்றும் ரஷீத் கான் லீடிங் விக்கெட் டேக்கர்களாக இருப்பார்கள் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. 

மேலும் கடைசி இடத்தை பிடிப்பதில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையே  இழுபறி இருக்கலாம் எனவும் பெட்டிங் பிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com