ஐபிஎல் 2020: எப்படி இருக்கும் அபுதாபி மைதானம் ?

ஐபிஎல் 2020: எப்படி இருக்கும் அபுதாபி மைதானம் ?
ஐபிஎல் 2020: எப்படி இருக்கும் அபுதாபி மைதானம் ?

13 ஆவது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி அபுதாபியின் ஷேக் சாயத் மைதானத்தில் இன்று மும்பை - சென்னை அணிகளுக்கு இடையே நடைபெற இருக்கிறது.

இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு காரணமாக இந்தாண்டு ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெறுகிறது. இதில் அபுதாபி, ஷார்ஜா, துபாயில் இருக்கும் மைதானங்களின் போட்டிகள் நடைபெற இருக்கிறது. இதில் அபுதாபி மைதானத்தில் மட்டும் 20 போட்டிகள் நடைபெற இருக்கிறது. அபுதாபி மைதானத்தில் 20 ஆயிரம் ரசிகர்கள் அமர்ந்து போட்டியை காணலாம். ஆனால் கொரோனா காரணமாக ரசிகர்கள் அனுமதியில்லாமல் போட்டி நடைபெறுகிறது.

இதுவரை இந்த மைதானத்தில் 45 சர்வதேச டி20 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இந்த மைதானத்தில் அதிகபட்சமாக டி20 போட்டியில் 225 ரன்கள் எடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கும் சாதகமாகவே இருக்கும். சராசரியாக முதலில் ஆடும் அணி 150 ரன்கள் எடுக்கலாம் என கணிக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆடுகளத்தில் ஹாங்காங் அணி 163 ரன்களை சேஸ் செய்து ஆப்கானிஸ்தானை வீழ்த்தியுள்ளது.

அதேபோல மித வேகப் பந்துவீச்சாளர்களுக்கும் கைகொடுக்கும் வகையிலும் அபுதாபியின் ஆடுகளம் செயல்படும். நிச்சயமாக இன்றையப் போட்டியில் மழையின் குறுக்கீடு இருக்காது எனத் தெரிகிறது. அபுதாபியில் இன்றைய வெப்பநிலை 35 டிகிரி செல்சியசாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டு இருக்கிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com