ஐபிஎல் போட்டிகளின் கால அட்டவணை நாளை வெளியீடு ?
ஐபிஎல் 2020 தொடரின் போட்டிகள் நடைபெறும் கால அட்டவணை நாளை வெளியிடப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் 2020 தொடங்க இன்னும் 15 நாட்களே உள்ள நிலையில், போட்டிகள் நடைபெறும் கால அட்டவணை இதுவரையிலும் வெளியிடப்படவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதே இந்த தாமதத்திற்கு காரணம் எனப்படுகிறது. இந்நிலையில் இன்று இரவோ அல்லது நாளையோ ஐபிஎல் தொடரின் காலஅட்டவணையை பிசிசிஐ அறிவிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, கடந்த மார்ச் மாதம் 29ஆம் தேதி தொடங்கயிருந்த ஐபிஎல் 2020 தொடர் கொரோனா ஊரடங்கு காரணமாக ஏப்ரல் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. கொரோனா வீரியம் இந்தியாவில் அதிகரித்ததால் பின்னர் காலவரையின்றி ஐபிஎல் தள்ளிவைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மத்திய அரசின் அனுமதியை பெற்று யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகத்தில்) ஐபிஎல் தொடரை நடத்த அனுமதி பெறப்பட்டது. அதன்படி, செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நவம்பர் 10ஆம் தேதி வரை துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய நகரங்களில் 13வது ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது.