\
மும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்ட்யா... காரணம் என்ன?

மும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்ட்யா... காரணம் என்ன?

மும்பை ஏர்போர்ட்டில் தடுத்து நிறுத்தப்பட்ட குர்னால் பாண்ட்யா... காரணம் என்ன?
Published on: 

அமீரகத்தில் அண்மையில் நிறைவு பெற்ற 2020க்கான ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடியவர் ஆல் ரவுண்டர் குர்னால் பாண்ட்யா. 

பாண்ட்யா சகோதரர்களில் மூத்தவர் இவர். இந்த தொடரில் டெல்லி அணியை வீழ்த்தி மும்பை அணி ஐந்தாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது. இறுதிப்போட்டியில் வின்னிங் ஷாட் அடித்தவர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர் நிறைவடைந்ததை அடுத்து அமீரகத்தின் பயோ பபுளில் இருந்து அனைத்து வீரர்களும் அவரவர் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர். அதில் ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்கள் மட்டும் அப்படியே துபாயிலிருந்து ஆஸ்திரேலியா செல்கின்றனர். 

அதனால் குர்னால் பாண்ட்யா துபாயிலிருந்து மும்பை திரும்பிய நிலையில் மும்பை விமான நிலையத்தில் வருவாய் புலனாய்வு இயக்குனராக அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார். 

அளவுக்கு அதிகமாக தங்க நகைகள் மற்றும் விலை மதிப்புமிக்க பொருட்களை அவர் வைத்திருந்ததால் சந்தேகத்தின் அடிப்படையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரிகிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com