ஐபிஎல்-ல் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்: தோனியை நெருங்கும் ரோகித் சர்மா!

ஐபிஎல்-ல் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்: தோனியை நெருங்கும் ரோகித் சர்மா!

ஐபிஎல்-ல் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்: தோனியை நெருங்கும் ரோகித் சர்மா!
Published on

சர்வதேச கிரிக்கெட்டில் ஹிட்மேன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் இந்திய கிரிக்கெட்டின் அதிரடி ஓப்பனர் ரோகித் ஷர்மா.

ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை வழிநடத்தி வருகிறார் ரோகித் சர்மா. கொல்கத்தா அணியுடனான லீக் ஆட்டத்தில் 54 பந்துகளில் 80 ரன்களை குவித்து டாப் ஆர்டர் பேட்ஸ்மேனாக நாக் கொடுத்தார் ரோகித். இதில் 3 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடங்கும். 

இதன் மூலம் ஐபிஎல் போட்டிகளில் 200 சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் இணைந்துள்ளார் ரோகித். 

ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர்களாக கிறிஸ் கெய்ல் (326), டிவில்லியர்ஸ் (214), தோனி (212) சிக்ஸர்களோடு டாப் மூன்று இடங்களில் உள்ளனர். 

அவர்களுக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ரோகித் ஷர்மா இணைந்துள்ளார். அதோடு 212 சிக்ஸர்களோடு மூன்றாவது இடத்தில் உள்ள தோனியை இந்த சீசனில் ரோகித் விரட்டுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com