ஐபிஎல் 2020 : சென்னை VS டெல்லி : துபாய் ஆடுகளம் எப்படி? வானிலை எப்படி?

ஐபிஎல் 2020 : சென்னை VS டெல்லி : துபாய் ஆடுகளம் எப்படி? வானிலை எப்படி?

ஐபிஎல் 2020 : சென்னை VS டெல்லி : துபாய் ஆடுகளம் எப்படி? வானிலை எப்படி?
Published on

இந்த சீசன் ஏழாவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிடல்ஸ் அணியும் துபாய் மைதானத்தில் விளையாடுகின்றன.

ஐபிஎல் போட்டிகளில் சென்னை உடனான ஆட்டத்தில் மோசமான வரலாற்றை கொண்டுள்ளது டெல்லி. இதுவரை மோதிய 21 ஆட்டங்களில் வெறும் ஆறு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

ஆடுகளம் எப்படி?

இந்த ஆடுகளம் முழுவதும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான ஆடுகளமாக பார்க்கப்படுகிறது. 

சராசரியாக 170 - 180 ரன் வரை இந்த மைதானத்தில் எடுக்கலாம். இந்த ஆட்டத்திற்கு முன்பாக இந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்று போட்டிகளில் 155 முதல் 200 ரன்கள் வரை குவிக்கப்பட்டுள்ளன. 

வேகப்பந்து வீச்சுக்கு ஆடுகளம் கைகொடுக்கலாம். 

வானிலை எப்படி?

பனிபொழுவை காரணம் காட்டி டாஸ் வெல்கின்ற அணிகள் பெரும்பாலும் பந்துவீச்சை முதலில் தேர்வு செய்கின்றன. அதனால் மிதமான பனிப்பொழிவு இன்று இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் 39 டிகிரி வரை வெப்பம் வீசுமாம். 

ப்ளேயிங் லெவன் : உத்தேச அணி 

சென்னை சூப்பர் கிங்ஸ்

தோனி (கேப்டன்), முரளி விஜய், வாட்சன், டுப்லெஸிஸ், ருதுராஜ் கெய்க்வாட், ஜாதவ், ஜடேஜா, சாம் கர்ரன், சஹார், பியூஷ் சாவ்லா, இம்ரான் தாஹிர்.

டெல்லி கேபிடல்ஸ்

ஷ்ரேயஸ் ஐயர் (கேப்டன்), தவான், பிருத்வி ஷா, பண்ட், ஹெட்மயர், ஸ்டாய்னிஸ், அக்சர் பட்டேல், அஸ்வின், ரபாடா, நார்ட்ஜெ, மோகித் ஷர்மா. 

இதனிடையே இரு அணிகளும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டுள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com