மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசும் வீரர்கள்.. பந்துகளை எடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்

மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசும் வீரர்கள்.. பந்துகளை எடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்
மைதானத்திற்கு வெளியே சிக்ஸர் விளாசும் வீரர்கள்.. பந்துகளை எடுக்க காத்திருக்கும் ரசிகர்கள்

ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியின் போது வீரர்கள் சிக்ஸர் விளாசும் போது மைதானத்திற்கு வெளியே வரும் பந்துகளை எடுத்துச் செல்ல ரசிகர்கள் சாலைகளில் காத்திருக்கின்றனர்.

ஐபிஎல் டி20 தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் இறுதிக்கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றன. பிளே ஆஃப் சுற்றுக்குள் இடம்பிடிக்க அணிகள் போட்டி போட்டுக் கொண்டு விளையாடி வருகின்றன. அதனால், ஒவ்வொரு போட்டிகளிலும் பரபரப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. நடப்பு ஐபிஎல் சீசனின் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய், அபுதாபி மற்றும் ஷார்ஜாவில் உள்ள மைதானங்களில் நடைபெற்று வருகின்றன. இதில், துபாய் மற்றும் அபுதாபி மைதானங்கள் அளவில் பெரியவை. ஷார்ஜா மைதானம் அளவில் சிறியவை.

துபாய் மற்றும் அபுதாபி மைதானங்களில் 100 மீட்டருக்கு மேல் சிக்ஸர் விளாசினால் தான் மைதானத்திற்கு வெளியே போகும். ஆனால், ஷார்ஜா மைதானத்தில் 90 மீட்டரில் சிக்ஸர் அடித்தாலும் மைதானத்திற்கு வெளியே செல்லும் வாய்ப்பு உள்ளது. அப்படி பலரும் மைதானத்திற்கு வெளியே பந்துகளை பறக்க விட்டிருக்கின்றனர்.

சிஎஸ்கே அணியின் கேப்டனும் தொடக்கத்தில் 92 மீட்டரில் விளாசிய சிக்ஸர் ஒன்று மைதானத்திற்கு வெளியே சாலையில் சென்று விழுந்தது எல்லோருக்கும் நினைவில் இருக்கும். அதன் பிறகு பலரும் ஷார்ஜா மைதானத்திற்கு வெளியே பந்துகளை பறக்கவிட்டனர்.

இந்நிலையில், மைதானத்திற்கு வெளியே வரும் பந்துகளை எடுத்துச் செல்வதற்காகவே சாலைகளின் ஓரத்தில் ரசிகர்கள் மொய்க்க தொடங்கியுள்ளனர். போட்டி நடைபெறும் நேரங்களில் சாலைகளில் ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றனர். ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போதும் ரசிகள் கூட்டம் மைதானத்திற்கு வெளியே அதிக அளவில் இருந்ததை காண முடிந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com