அடுத்தடுத்த தோல்வி... ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் - CSK VS DC - டாப் 10 தருணங்கள்

அடுத்தடுத்த தோல்வி... ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் - CSK VS DC - டாப் 10 தருணங்கள்
அடுத்தடுத்த தோல்வி... ஏமாற்றத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் - CSK VS DC  - டாப் 10 தருணங்கள்

துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
நடப்பு சீஸனில் டெல்லி வென்றுள்ள இரண்டாவது போட்டி இது.
இந்த போட்டியின் டாப் 10 தருணங்களை இனி பார்க்கலாம்.

1. கண்டுகொள்ளாமல் விடப்பட்ட பிருத்வி ஷாவின் இன்சைட் எட்ஜ்

ஆட்டத்தின் இரண்டாவது ஓவரை சாம் கர்ரன் வீசினார். அந்த ஓவரின் இரண்டாவது பந்தை எதிர்கொண்ட பிருத்வி ஷாவின் பேட்டில் இன்சைட் எட்ஜாகிய பந்து தோனியின் கிளவுஸுக்குள் தஞ்சமடைந்தது.
இருந்தாலும் பேட்டில் எட்ஜான சத்தம் கேட்காததால் தோனி உட்பட சென்னை வீரர்கள் யாருமே ‘அவுட்’ என அப்பீல் செய்யவில்லை.
அடுத்த பந்து வீசப்பட்டதும் அந்த பந்தை அல்டரா எட்ஜில் ஸ்கேன் செய்த போது பந்து பேட்டில் பட்டு சென்றது தெரிந்தது.
அந்த வாய்ப்பை பயன்படுத்தி பிருத்வி ஷா மேட்ச் வின்னிங் இன்னிங்ஸை விளையாடியிருந்தார்.


2. தவான் - பிருத்வி ஷாவின் அபாரமான தொடக்கம்

டெல்லி அணியின் ஒப்பனர்கள் தவானும், பிருத்வி ஷாவும் இணைந்து அபாரமான தொடக்கத்தை கொடுத்திருந்தனர்.
பவர் பிளேயில் விக்கெட் ஏதும் கொடுக்காமல் 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தவர்கள் அதற்கடுத்த 28 பந்துகளில் 58 ரன்களை குவித்திருந்தனர். இதன் மூலம் மொத்தமாக 94 ரங்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்திருந்தனர் அவர்கள் இருவரும்.


3. பிருத்வி ஷா : 64 பந்துகளில் 43 ரன்கள்

‘பேட்டிங்கில் நாங்க ரொம்ப ஸ்ட்ராங்’ என்பதை டெல்லி அணி இந்த ஆட்டத்தில் நிரூபித்துள்ளது.
அதில் ஹைலைட்டாக அமைந்தது பிருத்வி ஷாவின் ஆட்டம். 43 பந்துகளில் 64 ரன்களை குவித்திருந்தார். டி20 போட்டிகள் என்றாலே பந்தை ஆகாய மார்க்கமாக பேட்ஸ்மேன்கள் பறக்கவிடுவது வழக்கம். ஆனால் அப்படி செய்யாமல் தரையோடு தரையாக ஆடி அடக்கி வாசித்தார் பிருத்வி.
ஒரு சிக்ஸர் மற்றும் 9 பவுண்டரிகளை இந்த இன்னிங்ஸில் ஆடியிருந்தார். துபாய் பெரிய மைதானம் என்பதால் பிருத்வி அடக்குமுறை ஆட்ட பாணியை கடைபிடித்திருக்கலாம்.


4. மிடில் ஓவரில் கோட்டை விட்ட சென்னை

டெல்லி அணி பவர்பிளேயில் வெறும் 36 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது. ஆனால் அதற்கடுத்த 8 ஓவர்களில் 77 ரன்களை குவித்தது டெல்லி. 7 முதல் 14 வரையிலான இந்த மிடில் ஓவரை சென்னை அணியில் சுழற் பந்து வீச்சு இரட்டையர்கள் ஜடேஜாவும், பியூஷ் சாவ்லாவும் வீசியிருந்தனர்.
இருவரும் இணைந்து வெறும் 12 டாட் பால்களை மட்டுமே வீசியிருந்தனர்.
ஜடேஜா ஓவருக்கு 11 ரன்களும், சாவ்லா ஓவருக்கு 8.25 ரன்களும் விட்டுக்கொடுத்திருந்தனர்.
வேகப்பந்துவீச்சில் தீபக் சஹார் தன் பங்கிற்கு 38 ரன்களை விட்டுக்கொடுத்திருந்தார்.

5. பறவை போல பறந்து பந்தை கேட்ச் பிடித்த தோனி

ஸ்டெம்பிங், கேட்ச் என விக்கெட் கீப்பிங்கில் மாஸ் காட்ட தோனியால் மட்டுமே முடியும்.
டெல்லிக்கு எதிரான ஆட்டத்திலும் அபாரமாக கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார் தோனி.
டெல்லி பேட்டிங் இன்னிங்ஸின் பத்தொன்பதாவது ஓவரை சாம் கர்ரன் வீசினார்.
அந்த ஓவரின் கடைசி பந்தை டெல்லி கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் எதிர்கொண்டார்.
118.5 கிலோ மீட்டர் வேகத்தில் அவுட்சைட் ஆப் ஸ்டம்ப் நோக்கி வீசப்பட்ட அந்த பந்து ஷ்ரேயஸின் பேட்டில் பட்டு எட்ஜாகி ஸ்டம்புக்கு பின்னால் நின்று கொண்டிருந்த தோனியின் கைகளுக்கு சென்றது.
நொடி பொழுது கூட யோசிக்காமல் வலது பக்கமாக டைவ் அடித்து பறவை போல காற்றில் சில நொடிகள் பறந்து பந்தை கேட்ச் பிடித்தார் தோனி.

6. வாட்சன் VS அக்சர் பட்டேல் : தொடரும் சோகம்

சென்னையின் பில்லர்களில் ஒருவரான ஓப்பனர் வாட்சனுக்கு டெல்லியின் அக்சர் பட்டேல் இம்சை கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
அக்சரின் பந்து வீச்சு என்றாலே வாட்சனுக்கு அலர்ஜி தான். இந்த ஆட்டத்தையும் சேர்த்து அக்சரை எதிர்த்து ஆடிய 8 இன்னிங்ஸில் ஆறு முறை வாட்சன் அவுட்டாகியுள்ளார்.


7. ரன் சேர்க்க தவறிய ஒப்பனர்கள்

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தை தவிர சென்னை அணி பவர் பிளேயில் படுமோசமாக ஆடியுள்ளது. சென்னையின் துவக்க ஆட்டக்காரர்கள் வாட்சனும், முரளி விஜயும் தொடர்ந்து ஏமாற்றி வருகிறார்கள். காயத்திலிருந்து ராயுடு மீண்டால் இந்த ஏமாற்றத்திற்கு தீர்வு கிடைக்கலாம்.


8. மொத்தமாக சரண்டரான சென்னை பேட்ஸ்மேன்கள்

டெல்லியுடனான ஆட்டத்தில் டுபிலெஸிஸ் மற்றும் கேதர் ஜாதவின் பேட்டிங்கை தவிர மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களும் கிரீஸுக்கு வருவதும் பெவிலியனுக்கு நடையைக்கட்டுவதுமாக இருந்தனர்.
வாட்சன், முரளி விஜய், கெய்க்வாட், டோனி, ஜடேஜா என வரிசையாக பேட்ஸ்மேன்கள் டெல்லியிடம் சரண்டராகினர்.


9. ஆரஞ்ச் கேப்பை வென்ற டுப்லெஸிஸ்

சென்னை அணியின் பேட்டிங் யூனிட்டுக்கு ஒரே ஆறுதலாக அமைந்துள்ளது டுப்லெஸிஸ் ஆட்டம் தான். மும்பை மற்றும் ராஜஸ்தானோடு அரை சதம் கடந்திருந்த டுப்லெஸிஸ் டெல்லியுடன் 43 ரன்களை குவித்திருந்தார். இதன் மூலம் இந்த சீசனில் மூன்று போட்டிகளில் 173 ரன்களை குவித்து லீடிங் ரன் ஸ்கோரராக ஆரஞ்ச் கேப்பை வென்றுள்ளார்.
அதோடு ஐபிஎல் போட்டிகளில் 2000 ரன்களை எட்டிய பேட்ஸ்மேன்களில் ஒருவராக இந்த ஆட்டின் மூலம் இணைந்துள்ளார் டுப்லெஸிஸ்.


10. வேகத்தில் அசத்திய ரபாடா

இறுதி ஓவர்களில் சூப்பராக வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார் டெல்லியின் வேகப்பந்து வீச்சாளர் ரபாடா. நான்கு ஓவர்கள் வீசிய ரபாடா 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து டுப்லெஸிஸ், தோனி மற்றும் ஜடேஜாவை தனது வேகத்தால் வீழ்த்தியிருந்தார் ரபாடா. இதில் 11 டாட் பால்களும் அடங்கும். அவருக்கு கம்பெனிக்கு கொடுக்கும் வகையில் நார்ட்ஜெவும் வேகத்தால் சென்னையை மிரட்டியிருந்தார். இளம் வீரர்கள் அதிகம் இடம்பெற்றுள்ள டெல்லி அணி இந்த வெற்றியின் மூலம் இந்த சீசனில் பேக் டூ பேக் வெற்றியை குவித்துள்ளது. இதே வேகத்தில் டெல்லி வெற்றி நடை போட்டால் பிளே ஆப் சுற்று வரை முன்னேறலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com