ஐபிஎல் 2020 : டெல்லி அணியிடம் படுதோல்வி அடைந்த சிஎஸ்கே
துபாயில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.
இதன் மூலம் நடப்பு சீசனில் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளை டெல்லி அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற சென்னை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த டெல்லி மூன்று விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்திருந்தது.
டெல்லி அணி சார்பில் அதிகபட்சமாக பிருத்வி ஷா 64 ரன்களை குவித்திருந்தார்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை விரட்டிய சென்னை அணி பேட்டிங்கில் படுமோசமாக ஆடியது. டுப்லெஸில்(43) மற்றும் ஜாதவ் (26) என இரண்டு பேட்ஸ்மேன்களை தவிர மற்ற அனைவரும் கிரீஸுக்கு வந்தவுடன் பெவிலியனுக்கு நடையைக்கட்டினர்.
இருபது ஓவர் முடிவில் சென்னை அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை மட்டுமே குவித்திருந்தது. 44 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி பெற்றது.