அடுத்த ஆட்டத்தையும் மிஸ் செய்ய போகிறார் ராயுடு?

அடுத்த ஆட்டத்தையும் மிஸ் செய்ய போகிறார் ராயுடு?

அடுத்த ஆட்டத்தையும் மிஸ் செய்ய போகிறார் ராயுடு?
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியுடனான லீக் போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. 

சென்னை அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் அம்பத்தி ராயுடு ராஜஸ்தான் உடனான போட்டியில் விளையாடாததும் இந்த தோல்விக்கு காரணம். 

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக இந்த தொடரின் முதல் லீக் ஆட்டத்தில் 71 ரன்களை விளாசிய ராயுடு பின்னந்தொடையில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக ராஜஸ்தான் அணியுடனான ஆட்டத்தில் விளையாடவில்லை.

இந்நிலையில் அவர் சென்னை விளையாட உள்ள அடுத்த லீக் போட்டியையும் மிஸ் செய்வார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. 

“பயப்படும் படியாக ஒன்றும்இல்லை. தொடை பகுதியில் ஏற்பட்டுள்ள தசைப்பிடிப்பினால் அடுத்த போட்டியை ராயுடு மிஸ் செய்யலாம்” என சொல்லியுள்ளார் சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன்.

வரும் வெள்ளி அன்று டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் சென்னை விளையாட உள்ளது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com