ஐபிஎல் 2020 : கேட்ச்களை கோட்டை விடும் கிரிக்கெட் பிளேயர்கள்

ஐபிஎல் 2020 : கேட்ச்களை கோட்டை விடும் கிரிக்கெட் பிளேயர்கள்
ஐபிஎல் 2020 : கேட்ச்களை கோட்டை விடும் கிரிக்கெட் பிளேயர்கள்

‘நம்ம கிரிக்கெட் பிளேயர்ஸுக்கு என்ன தான் ஆச்சு?’ என மீம்ஸ் போட்டு கலாய்க்கும் அளவிற்கு நடப்பு ஐபிஎல் சீஸனில் கணக்கே இல்லாமல் கேட்ச்களை பிடிக்காமல் கோட்டை விட்டுள்ளனர் ஐபிஎல் அணி வீரர்கள்.


CATCHES WIN MATCHES என்ற சொலவடை கிரிக்கெட்டில் மிகவும் பிரபலம். ஆனால் அதற்கு நேர்மாறாக நடந்து முடிந்துள்ளது இதுவரையிலான ஏழு லீக் ஆட்டங்களிலும் இந்த சோகம் தொடர்கதையாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.


அதிலும் உலகின் தலைசிறந்த ஃபீல்டர்களில் ஒருவரான இந்திய கேப்டன் விராத் கோலி கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக அடுத்தடுத்து இரண்டு கேட்ச்களை டிராப் செய்தது பெருத்த விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடரின் தொடக்கத்தில் கேட்ச்களை ஃபீல்டர்கள் டிராப் செய்த போது கொரோனாவை குற்றவாளியாக்கி இருந்தனர் கிரிக்கெட் விமர்சகர்கள்.
“கிட்டத்தட்ட ஆறு மாத காலம் கிரிக்கெட் வீரர்கள் பயிற்சி செய்யாதது தான் இதற்கு காரணம்” எனவும் சொல்லப்பட்டது.


முதல் போட்டியில் பவுண்டரி லைனில் சூப்பர் மேன் போல மூன்று கேட்ச்களை பிடித்து அசத்திய சென்னை அணியின் டுப்லெஸிஸ் ‘அதிர்ஷ்டவசமாக எனது கைகளில் பால் நின்றுவிட்டது. நண்பர்கள் அனைவரும் கொரோனா சூழலினால் பயிற்சி மேற்கொள்ளாமல் இருந்தது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இருந்தாலும் அடுத்தடுத்த போட்டிகளில் அந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும்’ என சொல்லியிருந்தார்.


அதனை உறுதிப்படுத்தும் விதமாக அதற்கடுத்த போட்டிகளிலும் கேட்ச்கள் டிராப் செய்யப்பட்டன. குறிப்பாக பஞ்சாப்புக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் ஒரு கேட்சை டிராப் செய்திருந்தார்.
தொடர்ந்து ஹைதராபாத் அணிக்கு எதிராக பேர்ஸ்டோ பேட்டில் பட்டு காற்றில் பறந்து கொண்டிருந்த பந்தை கேட்ச் பிடிக்க தவறினர் பெங்களூரு அணி வீரர்கள்.
அந்த ஆட்டத்தில் பெங்களூருவுக்காக விளையாடும் ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் லட்டு போல கைக்கு வந்த ஒரு கேட்சை டிராப் செய்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.


தொடர்ந்து அதற்கடுத்த நாள் நடைபெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் சென்னை அணி வீரர்கள் கேட்ச் வாய்ப்பை வீணடித்தனர். பவுண்டரி லைனில் சாம் கர்ரன் கைக்கு வந்த கேட்சை சிக்ஸராக மாற்றியிருந்தார்.


இறுதியாக பஞ்சாப்புடனான ஆட்டத்தில் பெங்களூரு அணி சுமார் நாப்பத்துக்கும் மேற்பட்ட ரன்களை லீக் செய்ய மிகமுக்கிய காரணமாக அமைந்தது கேப்டன் கோலியின் கைகளிலிருந்து நழுவிய இரன்டு கேட்ச்கள். அதனை தனக்கான லைஃப்பாக பயன்படுத்திக் கொண்ட கே.எல்.ராகுல் சதம் கடந்திருந்தார்.
அதற்கு முன்னர் வரை கொரோனாவையும், துபாய் மைதானங்களில் அமைக்கப்பட்டிருந்த லைட்டுகளையும் குறை சொல்லி வந்த கிரிக்கெட் ஆர்வலர்கள் நேரடியாக கோலியை குறை சொல்லியிருந்தனர்.


இந்நிலையில் கேட்ச்கள் தொடர்ந்து டிராப் செய்யப்படுவது குறித்து தோனியிடம் கேட்கப்பட்டது ‘துபாய் மைதானங்களில் விளக்குகளின் வெளிச்சம் மங்கலாக இல்லை. ஆனால் இந்த செட் அப் வழக்கத்துக்கு மாறாக உள்ளது. இது என்னை போல பெரிய கிளவுஸ்களை அணிந்துள்ளவர்களுக்கு பெரிதும் தொல்லையாக இருக்காது. ஆனால் ஃபீல்டர்களுக்கு கொஞ்சம் சவால் தான். இதை நாம் சொன்னனால் பந்தை கேட்ச் பிடிக்காமல் மிஸ் செய்பவர்கள் அதையே காரணமாக நம்மிடம் சொல்லிவிடுவார்கள்’ என தோனி தெரிவித்திருந்தார்.


மாடர்ன் கிரிக்கெட்டில் ஃபீல்டர்கள் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் அர்ப்பணித்து துடிப்போடு விளையாடுவார்கள். காரணம் ஒவ்வொரு ரன்னும் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தும் என்பது தான் காரணம்.


கே.எல்.ராகுல் சதம் அடிக்க கோலி விடுத்த கேட்ச் போல பல அப்செட்களை அடுத்தடுத்த போட்டிகளில் நடக்காமல் இருக்க வீரர்கள் பேட்டிங் மற்றும் பவுலிங் மட்டுமல்லாது ஃபீலடிங்கிலும் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். அப்படி செய்தால் அது ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com