சூரியன் சுட்டெரிக்கும் ஜெய்ப்பூரில் சாதிக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ?

சூரியன் சுட்டெரிக்கும் ஜெய்ப்பூரில் சாதிக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ?
சூரியன் சுட்டெரிக்கும் ஜெய்ப்பூரில் சாதிக்குமா கிங்ஸ் லெவன் பஞ்சாப் ?

ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று ஜெய்ப்பூரில் மோதவுள்ளனர்.

12ஆவது ஐபிஎல் தொடர் சனிக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. முதல் போட்டியில் சென்னை அணி பெங்களூர் அணியை வீழ்த்தியது. நேற்று நடைபெற்ற போட்டிகளில் கொல்கத்தா மற்றும் டெல்லி அணிகள் வென்றுள்ளன. இதனையடுத்து இன்று ஜெய்ப்பூரில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் மோதவுள்ளனர். 

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை பொருத்தவரை அணியின் கேப்டன் ரவிசந்திரன் அஸ்வின் சுழற்பந்துவீச்சில் கலக்க காத்திருக்கிறார். அவருடன் இணைந்து பந்துவீச்சில் அசத்த மற்றொரு தமிழ்நாட்டு வீரரான வருண் சக்ரவர்த்தியும் முனைப்புடன் உள்ளார். இந்தாண்டு ஐபிஎல் போட்டிகளின் ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட்டவர் இவர் என்பதால் சக்ரவர்த்தியின் மீது எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மேலும் முகமது ஷமி மற்றும் ஆண்ட்ரூ டை ஆகியோரும் உள்ளதால் பந்துவீச்சு மிகவும் பலம் வாய்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல பேட்டிங்கில் கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல் அதிரடி காட்டினால் இந்த அணியின் ரன் மழையை தடுப்பது கடினமாகும்.

ராஜஸ்தான் அணியில் ஸ்டீவ் ஸ்மித் களமிறங்கவுள்ளார். இவர் ஆஸ்திரேலிய அணியில் தடைக் காரணமாக விளையாடுவதில்லை. அதனால் இவர் தற்போது ஐபிஎல் போட்டியில் விளையாடவுள்ளது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே நேற்று நடைபெற்ற போட்டியில் தடையிலிருந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான டேவிட் வார்னர் களமிறங்கி அசத்தினார். அதனால் அவரை போல் இவரும் கலக்குவார் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். இவருடன் ரஹானே, ஜோஸ் பட்லர், பேன் ஸ்டோர்க்ஸ் ஆகியோர் அணியின் பேட்டிங்கை பலப் படுத்துகின்றனர். பந்துவீச்சில் ஜெயதேவ் உணாத்கட், வருண் ஆரான், தாவல் குல்கர்னி மற்றும் சோதி ஆகியோர் உள்ளனர். 

இதுவரை 17 ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் அணிகள் மோதியுள்ளனர். அவற்றில் ராஜஸ்தான் 10 முறையும், பஞ்சாப் 7 முறையும் வெற்றி பெற்றுள்ளனர். மேலும் ராஜஸ்தானில் நடந்துள்ள 6 போட்டியில் ராஜஸ்தான் அணி 5 போட்டிகளிலும், பஞ்சாப் அணி 1ஒரு போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் இன்று ராஜஸ்தானில் நடக்கும் போட்டியில் ராஜஸ்தான் அணிக்கே அதிக வெற்றி வாய்ப்பு உள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com