டாஸ் வென்ற பஞ்சாப் பந்துவீச்சு - கோலி 13 ரன்னில் அவுட் !
பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான 42வது லீக் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணியில் பார்த்தீவ் படேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். விராட் கோலி 8 பந்தில் 13 ரன்கள் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய பார்த்தீவ் 24 பந்தில் 43 ரன்கள் எடுத்து முருகன் அஷ்வின் பந்துவீச்சில் அவுட் ஆனார். பெங்களூர் அணி 602 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் எடுத்துள்ளது.
பாஞ்சாப் அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கர்ரன், ஹர்பிரீட் ஆகிய இருவருக்கு பதிலாக பூரான், ராஜ்புட் சேர்க்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெங்களூர் அணியில் ஸ்டெயின்-க்கு பதிலாக சவுத்தி களமிறங்குகிறார். அதேபோல், நெகிக்கு பதிலாக தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் முதன்முறையாக களமிறங்குகிறார்.
இரு அணிகளும் இதுவரை 23 போட்டிகளில் நேரடியாக மோதியுள்ளது. பெங்களூர் 11, பஞ்சாப் 12 போட்டிகளில் வென்றுள்ளன. இந்த ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 5இல் வெற்றியும், 5இல் தோல்வியும் அடைந்து 5வது இடத்தில் உள்ளது. பெங்களூர் அணி 3 வெற்றி, 7 தோல்விகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.