“போட்டி என்றால் யாராவது தோற்கதானே வேண்டும்” - தோனி

“போட்டி என்றால் யாராவது தோற்கதானே வேண்டும்” - தோனி

“போட்டி என்றால் யாராவது தோற்கதானே வேண்டும்” - தோனி
Published on

போட்டி என்றால் யாராவது ஒருவர் தோற்கதானே வேண்டும் என்று சென்னை அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கூறினார்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் விளையாடிய சென்னை அணி 4 விக்கெட் இழப்புக்கு 131 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து விளையாடிய மும்பை அணி 18.3 ஓவரில் 132 ரன் எடுத்து வெற்றி பெற்றது. 

இந்நிலையில், தோல்விக்கு பின்னர் பேசிய தோனி, “போட்டியில் யாராவது ஒருவர் தோற்கதானே வேண்டும். உங்களுடைய மைதானத்தின் தன்மையை நீங்கள் அறிந்து இருக்க வேண்டும். அதனை வீரர்கள் சரியாக செய்யவில்லை. பேட்டிங் இன்னும் கொஞ்சம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஒரு போட்டியில் அடித்தால், மற்றொரு போட்டியில் அவுட் ஆகிவிடுகிறார்கள். அவர்கள் சிறந்த பேட்ஸ்மேன்கள்தான். அனுபவத்தில் சிறிது தேக்கம் ஏற்பட்டுவிட்டது. மும்பை வீரர்கள் தங்களது அனுபவத்தை நன்றாக பயன்படுத்தினார்கள். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்.

எதிர்பாராத விதமாக சில கேட்சுகளை விட்டுவிட்டார்கள். இன்னும் கொஞ்சம் சிறப்பாக பந்துவீசி இருக்க முடியும். மும்பை பேட்ஸ்மேன்களுக்கு தகுந்தாற்போல் பந்துவீசவில்லை. போதிய அளவு ரன்கள் அடிக்காத பட்சத்தில், ஒவ்வொரு பவுண்டரியும் சிக்கலாக மாறும். சிறப்பாக பந்துவீச்சை தொடங்கினோம். ஆனால், தொடர்ச்சியாக சில பவுண்டரிகளை விட்டுவிட்டோம். டாப் இரண்டு பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க செய்த பின்னர், மேற்கொண்டு சரிவை ஏற்படுத்தி இருக்க வேண்டும்” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com