ஹர்திக் அதிரடி வீண்- நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

ஹர்திக் அதிரடி வீண்- நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா

ஹர்திக் அதிரடி வீண்- நான்கு ஆண்டுகளுக்கு பின் மும்பையை வீழ்த்தியது கொல்கத்தா
Published on

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

ஐபிஎல் தொடரின் 47வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் நேற்று மோதின. இதில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து கொல்கத்தா அணியின் கிறிஸ் லின்(54), சுப்மன் கில்(76) மற்றும் ரஸல் (80) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் கொல்கத்தா அணி 232 ரன்களை எடுத்தது.

இதனையடுத்து 233 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய மும்பை அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். டி காக் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். அதேபோல மும்பை கேப்டன் ரோகித் சர்மா 12 ரன்களில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார். இதனால் மும்பை அணி 3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனைத்தொடர்ந்து எவின் லூயிஸ் (15) ரன்களில் விக்கெட்டை பறிக்கொடுத்தார்.

மும்பை கிட்டதட்ட பரிதாபமான தோல்வியை நோக்கி செல்லும் நிலையில் இருந்தது. இந்தச் சூழலில் களமிறங்கிய அதிரடி நாயகன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் பொலார்டு ஆகியோர் அணியை சரிவிலிருந்து மீட்டனர். ஹர்திக் பாண்ட்யா கொல்கத்தா பந்துவீச்சை நொறுக்கினார். குறிப்பாக சாவ்லா ஓவரில் சிக்சர் மழை பொழிந்தார். 13.3 ஓவரில் நரேன் வீசிய பந்தை சிக்சருக்கு விளாசி 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். அத்துடன் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேகமாக அரைசதம் கடந்தவர் என்ற சாதனையையும் பாண்ட்யா படைத்தார். மறுமுனையில் பொலார்டு 20 ரன்களுடன் ஆட்டமிழந்தார்.

எனினும் ஹர்திக் பாண்ட்யா தனது அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இதனால் மும்பை அணி 15 ஓவர்களில் 140 ரன்கள் சேர்த்தது. அடுத்த 5 ஓவர்களில் மும்பை அணிக்கு 93 ரன்கள் தேவைப்பட்டது. இது கடினமானதாக இருந்தாலும் பாண்ட்யாவின் ஆட்டத்தால் இதை எட்ட முடியும் என நம்பிக்கை எழுந்தது. ஆனால் 18 ஓவரில் ஹர்திக் பாண்ட்யா கர்னே பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவர் 9 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உடன் 34 பந்துகளில் 91 ரன்கள் எடுத்தார். ஹர்திக் பாண்ட்யாவின் விக்கெட்டை தொடர்ந்து மும்பை அணியின் தோல்வி உறுதியானது.

இறுதியில் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கொல்கத்தா அணி மும்பையை வீழ்த்தியது. அத்துடன் நடப்பு ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் அடைந்த தோல்விக்கு பிறகு கொல்கத்தா அணி வெற்றிப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com