பீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்

பீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்
பீல்டிங்கில் சொதப்பிய கொல்கத்தா - அதிரடியாய் வென்ற ஹைதராபாத்

கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் வார்னர், பேர்ஸ்டோவ் அதிரடியால் ஹைதராபாத் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.

ஐபிஎல் தொடரின் 38லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக லின் 51 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் அணியில் கலில் அஹமது 3 விக்கெட் சாய்த்தார். புவனேஸ்வர் குமார் இரண்டு விக்கெட் எடுத்தார். 

இதனையடுத்து, 160 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடிய ஹைதராபாத் அணிக்கு வார்னர், பேர்ஸ்டோவ் சிறப்பான தொடக்கம் அளித்தனர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். அதேவேளை அவர்கள் கொடுத்த பல எளிமையான கேட்சுகளை கொல்கத்தா வீரர்கள் கோட்டைவிட்டனர். அதனால், பல முறை அவர்கள் வாய்ப்பை பெற்றனர்.

வார்னர், பேர்ஸ்டோவ் இருவரும் அடுத்தடுத்து அரை சதம் அடித்தனர். அதிரடியாக விளையாடிய வார்னர் 38 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால், பேர்ஸ்டோவ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்து ஹைதராபாத் அணியை வெற்றி பெற செய்தார். அந்த அணி 15 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 161 ரன்கள் எடுத்தது. பேர்ஸ்டோவ் 43 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். 

9 போட்டிகளில் விளையாடியுள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு இது 5வது வெற்றி. அதேபோல், 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இது 6வது தோல்வி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com