“எனது நண்பர், சகோதரர், லெஜெண்ட் எல்லாமே தோனிதான்” - பாண்ட்யா நெகிழ்ச்சி

“எனது நண்பர், சகோதரர், லெஜெண்ட் எல்லாமே தோனிதான்” - பாண்ட்யா நெகிழ்ச்சி

“எனது நண்பர், சகோதரர், லெஜெண்ட் எல்லாமே தோனிதான்” - பாண்ட்யா நெகிழ்ச்சி
Published on

இந்த ஐபிஎல் தொடரில் மிகச் சிறந்த ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்ட்யா ஜொலித்து வருகிறார். பேட்டிங்கை பொருத்தவரை மிடில் ஆர்டரில் கடைசி நேரத்தில் களமிறங்கி குறைவான பந்துகளை சந்தித்து அதிரடி காட்டுவார். எளிதில் சிக்ஸர்களை விளாசுவார். அவர் கடைசி கட்டத்தில் அடிக்கும் ரன்கள் மும்பை அணிக்கு உதவியாக இருக்கும். அதேபோல், பந்துவீச்சில் அதிக ரன்கள் விட்டுக் கொடுத்தாலும் விக்கெட்கள் எடுத்துவிட்டார். 

ஐபிஎல் தொடரில் இதுவரை 15 போட்டிகளில் விளையாடியுள்ள ஹர்திக் பாண்ட்யா 393 ரன்கள் குவித்துள்ளதோடு, 14 விக்கெட்களையும் சாய்த்துள்ளார். இதுவரை 29 சிக்ஸர் விளாசியுள்ளார். அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்துள்ளார். சென்னைக்கு எதிரான நேற்றைய போட்டியில் பந்துவீச்சில் 2 ஓவர்கள் போட்டு 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்தார். பேட்டிங்கில் 6வது வீரராக களமிறங்கி 11 பந்துகளில் 13 ரன்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

இந்நிலையில், ஹர்திக் பாண்ட்யா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தோனியை புகழ்ந்துள்ளார். “என்னுடைய முன்னுதாரணம், எனது நண்பர், எனது சகோதரர், எனது லெஜண்ட் எல்லாமே எம்.எஸ்.தோனிதான்” என்று குறிப்பிட்டுள்ளார். கூடவே தோனியுடன் அவர் இருப்பது போன்ற படத்தையும் பதிவிட்டுள்ளார். ஹர்திக் பாண்ட்யா பதிவிட்ட படமும், ட்விட்டும் சமூக வலைத்தளங்களில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது. சிலர் நகைச்சுவையான மீம்ஸ்களையும் பதிவிட்டுள்ளனர்.

தோனி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டாக இருந்தாலும், போட்டி நடைபெற்ற எல்லா மைதானத்திலும் அவருக்கு உற்சாக வரவேற்பும், ரசிகர் கூட்டமும் இருந்தது. தோனி பேட்டிங் செய்யும் போது ரசிகர்கள் அவ்வளவு ஆரவாரம் செய்து உற்சாகமாக இருப்பார்கள். தோனி மீதுள்ள ஈர்ப்பால் பல இளம் வீரர்கள் இந்திய அணிக்கு வந்துள்ளனர். இளம் வீரர்களுக்கு அவர் முக்கிய ஆலோசகராகவே இருந்து வருகிறார். தோனி களத்தில் இருந்தாலே அவர்களுக்கு கூடுதல் பலம் உள்ளது போல் உணர்கிறார்கள். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com