ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி?- முதலில் பேட்டிங்

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி?- முதலில் பேட்டிங்

ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா டெல்லி?- முதலில் பேட்டிங்
Published on

பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐபிஎல் தொடரில் டெல்லி ஃபெரோஷா கோட்லா மைதானத்தில் இன்று நடைபெறும் லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் டெல்லி கேபிடல்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. டெல்லி அணியில் கிறிஸ் மோரிஸ் இல்லை. அவருக்குப் பதில் சந்தீப் லமிசானே சேர்க்கப்பட்டுள்ளார். பெங்களூர் அணியில் மோயின் அலி, டிம் சவுதி ஆகியோர் விளையாடவில்லை.

இந்த இரு அணிகளும் கடந்த 1ஆம் தேதி பெங்களூருவில் மோதினர். அந்தப் போட்டியில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது. இதனால் இன்று நடைபெறும் இந்தப் போட்டியில் பெங்களூர் அணி இதற்கு பலி தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 தோல்விகள் அடைந்தப் பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பியுள்ளது. இதனால் இந்தப் போட்டியிலும் பெங்களூர் அணியின் வெற்றித் தொடரும் என ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல நடப்பு ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 11 போட்டிகளில் 7ல் வெற்றிப் பெற்றுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் டெல்லி அணி வெற்றிப் பெற்றால் அந்த அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது ஏறக்குறைய உறுதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com