நியூசி.வேகம் காயம்: மும்பை இண்டியன்ஸ் அணிக்கு புதிய வீரர்!
வெஸ்ட் இண்டீஸின் இளம் வேகப் பந்துவீச்சாளர் அல்ஜாரி ஜோசப், மும்பை இண்டியன்ஸ் அணிக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
மும்பை இண்டியன்ஸ் அணியில் இடம் பெற்றிருந்தவர் நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஆடம் மில்னே. இவர் காயமடைந்ததை அடுத்து ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். ஏற்கனவே வேகப்பந்துவீச்சாளர் மலிங்கா சில போட்டிகளில் விளையாடவில்லை. ஆஸ்திரேலிய வீரர் ஜேசன் பெரண்டோர்ஃப், பாகிஸ்தானுக்கு எதிரானப் போட்டியில் விளையாடிக் கொண்டிருப்பதால் மும்பை அணியில் இடம்பெறவில்லை. ஜஸ்பிரித் பும்ராவும் காயமடைந்துள்ளார்.
(மில்னே)
இந்நிலையில் வேகப்பந்துவீச்சைப் பலப்படுத்த மும்பை இண்டியன்ஸ் அணி முடிவு செய்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளர் அல்ஜாரி ஜோசப்பை ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் விரைவில் மும்பை அணியில் இணைவார் என்று தெரிகிறது.
வெஸ்ட் இண்டீஸூக்காக, 16 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள ஜோசப், 24 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். 9 டெஸ்ட் போட்டிகளில் 25 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.