‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்!

‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்!
‘ஐபிஎல்-ஐ வேகத்தால் மிரட்டிய’ டாப் 5 பந்து வீச்சாளர்கள்!

நடந்து முடிந்த ஐபிஎல் போட்டியில் அதிகவேகமாக பந்துவீச்சாளர்களில் டாப் 5 வீரர்களை காணலாம்.

கடந்த 2 மாதங்களாக நடைபெற்ற ஐபிஎல் போட்டி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடர், கடந்த 27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்தத் தொடரின் லீக் போட்டிகளிலேயே, யார்? ப்ளே ஆப் சுற்றில் இடம்பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் தொற்றிக்கொண்டது.

ப்ளே ஆப் சுற்றை நெருங்கும் நேரத்தில், எந்த அணி முதல் நான்கு இடத்தை பிடிக்கும் என்பது கணிக்க முடியாத ஒன்றாக மாறியது. ஒவ்வொரு அணியும் வெளியேறும் போது, அதன் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இருந்தபோதும் வெளியேறிய அணி வீரர்கள் கூறிய கருத்துகளில், ‘ஐபிஎல் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கிறது’ என்பதே பொதுவான கருத்தாய் இருந்தது. அதற்கேற்ப இந்த ஐபிஎல் போட்டியிலும் புதிய இளம் வீரர்கள் தங்கள் திறமையை நிரூபித்தனர். இதில் பேட்ஸ்மேன்கள் தங்கள் அதிரடியை வெளிப்படுத்தினர். பந்துவீச்சாளர்கள் தங்கள் வேகப்பந்தால் மிரட்டினர்.

அந்த வகையில் ஐபிஎல் தொடரில் அதிவேகமாக பந்துவீசிய டாப் 5 வீரர்கள் பட்டியலிடப்பட்டுள்ளனர். இதில் ஆஸ்திரேலிய அணியைச் சேர்ந்த பில்லி ஸ்டேன்லேக், 151.38 கி.மீ வேகத்தில் பந்துவீசி முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். இவரைத் தொடர்ந்து இந்திய வீரர்கள் முகமது சிராஜ் (24) 149.94 கி.மீ வேகத்துடன் இரண்டாம் இடத்திலும், சிவம் மவி (19) 149.85 கி.மீ வேகத்துடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். இதில் முகமது சிராஜ் பெங்களூரு அணியிலும், சிவம் மவி கொல்கத்தா அணியிலும் விளையாடினர். 149.50 கி.மீ வேகத்துடன் ஜோஃப்ரா ஆர்ச்சர் (மேற்கிந்திய தீவுகள் அணி) 4ஆம் இடமும், 149.12 கி.மீ வேகத்துடன் இந்திய வீரர் அவேஷ் கான் (21) 5 இடமும் பிடித்துள்ளனர். ஐபிஎல்-ல் ஜோப்ரா ஆர்ச்சர் ராஜஸ்தான் அணியிலும், அவேஷ் கான் டெல்லி அணியிலும் விளையாடினர்.

பில்லி ஸ்டேன்லேக்

முகமது சிராஜ்

சிவம் மவி

ஜோஃப்ரா ஆர்ச்சர்

அவேஷ் கான்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com