\
டெல்லியை எளிதில் வீழ்த்துமா சென்னை - 164 ரன் இலக்கு

டெல்லியை எளிதில் வீழ்த்துமா சென்னை - 164 ரன் இலக்கு

டெல்லியை எளிதில் வீழ்த்துமா சென்னை - 164 ரன் இலக்கு
Published on

டெல்லியில் நடைபெற்று வரும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு 163 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ்.

ஐபிஎல் தொடரின் 52வது போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணிகளுக்கு இடையே போட்டி டெல்லியில்
 நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பந்துவீச தீர்மானித்தது. அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிரித்வ் ஷா மற்றும் ஷ்ரேயாஷ் ஐயரும் களம் இறங்கினர். பிரித்வ் ஷா 17 பந்துகளில் 17 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பந்த் கேப்டன் ஷ்ரேயாஷ் ஐயருடன் இணைந்தார். இந்த ஜோடி டெல்லி அணிக்கு சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுக்க போராடியது. 

இந்நிலையில் அணியின் ஸ்கோர் 78 ரன்னாக இருந்த போது ஷ்ரேயாஷ் ஐயர் அட்டமிழந்த நிலையில் அதே ஒவரிலே ரிஷப் பந்த்தும் 38 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் அந்த அணி முன்னணி வீரர்களை இழந்து தடுமாறியது. அடுத்து வந்த மேக்ஸ்வெலும் உடனே வெளியேற அந்த அணி ஒரு கட்டத்தில் அந்த அணி 150 ரன்களை எட்டுமா ? என்பதே சந்தேகமாக இருந்தது. எனினும் கடைசிகட்ட ஒவர்களில் தமிழகத்தை சேர்ந்த விஜய் சங்கர் மற்றும் பட்டேல் இருவரும் அதிரடி காட்ட இறுதியில் அந்த அணி 20 ஒவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்நிலையில் 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கி விளையாடி வருகிறது. 6 ஒவர் முடிவில் விக்கெட் இழப்பின்றி  44 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. 
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com