தோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர்மா - த்ரில்லான கடைசி ஓவர்

தோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர்மா - த்ரில்லான கடைசி ஓவர்

தோனிக்கே தண்ணி காட்டிய மோகித் சர்மா - த்ரில்லான கடைசி ஓவர்
Published on

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மோகித் சர்மா சிறப்பாக பந்துவீசி தோனியை ரன் அடிக்கவிடாமல் செய்ததுதான் பஞ்சாப் அணியை வெற்றி பெற காரணமானது.

சண்டிகரில் நடைப்பெற்ற இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் 20 ஓவர்கள் முடிவில் 197 ரன்கள் குவித்தது. கிறிஸ் கெயில் அதிரடியாக விளையாடி 33 பந்துகளில் 63 ரன்கள் குவித்தார். இதனையடுத்து, 198 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சென்னை அணி விளையாடியது. சென்னை அணி 19 ஓவர்கள் முடிவில் 181 ரன்கள் எடுத்தது. களத்தில் தோனி (69), பிராவோ(0) ரன்களுடன் களத்தில் இருந்தனர். கடைசி ஓவரை மோகித் சர்மா வீசினார். 17 ரன்கள் எடுத்தால் வெற்றி. கடைசிப் போட்டியிலும் 17 ரன்கள் தேவைப்பட்ட போது பிராவோவும், ஜடேஜாவும் அடித்து சென்னை அணியை வெற்றி பெறச் செய்தனர். அதேபோல் இந்தப் போட்டியிலும் சென்னை அணி வெற்றி பெறும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

மோகித் சர்மா வீசிய முதல் பந்தினை பிராவோ சந்தித்தார். சிக்ஸர் அடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் பிராவோ சிங்கில் மட்டும் அடித்தார். இதனால் கடைசி 5 பந்துகளில் 16 ரன்கள் எடுக்க வேண்டியிருந்தது. தோனி இரண்டாவது பந்தை சந்தித்தார். மோகித் ஆப்சைடில் பந்தை வீசினார். வொயிடு என்றே கருதப்பட்டது. ஆனால், அம்பயர் "வைடு" கொடுக்கவில்லை. ரிப்ளையில் பார்த்தால், பந்து சரியாக ஆப்சைடு லைனில் சென்றது தெரிந்தது. இப்போது 4 பந்துகளுக்கு 16 ரன்கள் தேவை. இதனால் டென்சன் எகிறியது. மூன்றாவது பந்தையும் ஆப்சைடில் போட்டார் மோகித். ஆனால், அந்த பந்து வொயிடு ஆனது. இரண்டு பந்துகள் ஆப்சைடில் வந்ததை தோனி கணித்திருக்கக் கூடும். அடுத்த முறையும் மொகித் ஆப்சைடில் அதே லைனில் போட்ட பந்தினை பவுண்டரி அடித்தார். 3 பந்துகளுக்கு 11 ரன்கள் தேவை என்ற நிலையில், 4வது பந்தையும் அதேபோல் ஆப்சைடில் வீசி டாட் பால் ஆக்கினார் மோகித். இதனால் ஆட்டத்தில் மேலும் பதற்றம் அதிகரித்தது.  

5வது பந்தை அதேபோல், ஆப்சைடில் போட்டார் மோகித். தோனி அந்த பந்தை அடிக்க, அது எல்லையில் நின்ற வீரர் கைகளுக்கு நேராக சென்றது. ஒரு ரன் மட்டுமே எடுக்க முடியும் என்பதால் தோனி ஓடவில்லை. இதனால், கடைசி பந்தில் 11 ரன்கள் எடுக்க வேண்டியதால், பஞ்சாப் அணியின் வெற்றி உறுதி ஆனது. கடைசி பந்தினை நேராக வீச அதில் சிக்ஸர் அடித்தார் தோனி. இருப்பினும், 4 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வியை தழுவியது. 

இதில் கவனிக்க வேண்டியது என்னவென்றால், இதுபோன்ற இக்கட்டான சூழ்நிலையில் சிக்ஸர்கள் அடிக்காமல் இருப்பதை தவிர்க்க, வேகப்பந்து வீச்சாளர்கள் பவுன்சரை தேர்வு செய்வார்கள். சிலர் யாக்கர் பந்துகளை வீசுவார்கள். சிலர் டெத் ஓவர்களில் யாக்கர் பந்து வீச்சி போல்ட் விக்கெட் எடுப்பார்கள். ஆனால், இவை எதுவும் இல்லாமல் ஆப்சைடு லைனை தேர்வு செய்தது மிகவும் மொகித் தேர்வு செய்தது மிகவும் புத்திசாலித்தனமான யோசனை. தோனிக்கு நேராக பந்து வீசினால் எப்படியும் சிக்ஸர் அடித்து விடுவார் என்பது தெரிந்து அதனை தவிர்த்தும் நல்ல யோசனை. நிச்சயம் தோனியின் பலம் - பலவீனம் தெரிந்த அஸ்வின் தான் இந்த யோசனையை கூறியிருக்க வேண்டும். தோல்வியே பெற்றிருந்தாலும், தோனியின் சிக்ஸர் விருந்து சென்னை அணியின் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com