‘எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு’ தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

‘எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு’ தினேஷ் கார்த்திக் நம்பிக்கை

‘எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருக்கு’ தினேஷ் கார்த்திக் நம்பிக்கை
Published on

ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற தங்கள் அணிக்கு இன்னும் வாய்ப்புள்ளதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி சென்னை சூப்பர் கிங்ஸ் உடனான முதல் போட்டியில் தோல்வி அடைந்தது. அதன் பிறகு வெற்றியும், தோல்வியும் கலந்து அந்த அணிக்கு கிடைத்தது. மும்பை அணிக்கு எதிரான கடைசி இரண்டு போட்டியில் கொல்கத்தா அணி தோல்வி அடைந்தது. இதனால், கொல்கத்தா அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளையும், 6 தோல்விகளையும் பெற்றுள்ளது. மீதமுள்ள 3 போட்டிகளிலும் அந்த அணி வெற்றி பெற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. புள்ளி பட்டியலில் கீழே இருந்த மும்பை அணி அடுத்தடுத்து வெற்றிகளை பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கொல்கத்தா அணி 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்நிலையில், தங்கள் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளதாக தினேஷ் கார்த்திக் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறுகையில், “மீதமுள்ள அனைத்துப் போட்டிகளிலும் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கு வாய்ப்பு உள்ளது. எனக்கு அதில் நம்பிக்கை உள்ளது. அதேபோல், என்னுடைய அணி வீரர்களையும் நம்பிக்கை வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன். மும்பை அணிக்கு பிறகு எங்களது ரன் ரேட் குறைந்துள்ளது. அதனை கவனத்தில் கொண்டு விளையாடுவோம்” என்றார்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com